நாடாளுமன்ற தேர்தல் 2024… மத்திய சென்னை கூட்டணி கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் மஜக நிர்வாகிகள் பங்கேற்பு….

மார்ச்.22.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று மத்திய சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதியின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் ஓட்டேரியில் நடைப்பெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,மத்திய சென்னை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன்,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்தியசென்னை_மாவட்டம்
22.03.2024.