மார்ச்.27., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சி மாவட்டம் படப்பை அருகில் நடைபெற்றது. கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பங்கேற்று பேசிய மாநில துணைச்செயலாளர் பேரா.சலாம், ஶ்ரீ பெரம்பத்தூர் வேட்பாளர் திரு. T.R. பாலு, மற்றும் காஞ்சிபும் தொகுதி வேட்பாளர் செல்வம் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உரையாற்றினார். வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் அமைச்சர் திரு. தாமோ. அன்பரசன், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக பாலாஜி MLA., மதிமுக மல்லை.சத்யா, மமக தாம்பரம். யாகூப், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜக மாநில துணைச் செயலாளர் S.M. நாசர், மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் பைசல், வழக்கறிஞர் அணி செயலாளர் அமீன், துணை செயலாளர் ஸ்வாதிஸ்,
தமிழகம்
தமிழகம்
திருப்பூரில்… மஜக இஃப்தார் நிகழ்ச்சி… இந்தியா கூட்டணி வேட்பாளர் கே சுப்பராயன் அறிமுகம்…
மார்ச்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா அவர்கள் தலைமையில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் நெல்லை ரமேஷ் முன்னிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள கே.கே. அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே சுப்பராயன் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்தி தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் அவர்கள் நாற்பது தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற கூடுதல் உழைப்பு அவசியம் எனவும் இதற்கு மஜக-வினர் முழுமையாக ஒத்துழைப்பு தருவதாகவும் குறிப்பிட்டு பேசினார். மாநகர மேயர் ந.தினேஷ் குமார் அவர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வேட்பாளர் நம் சுப்பராயன் என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மஜக மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் அவர்கள் பேசும்போது தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஆணைக்கிணங்க திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றியை அறுவடை செய்யும் என உரையாற்றி அமர்ந்தார். இறுதியாக பேசிய வெற்றி
வேலூரில்… அமைச்சர் உதயநிதி பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…
மார்ச் 26., I.N.D.I.A கூட்டணியின் வேலூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. DM. கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் வேலூர் மாவட்ட செயலாளர் கஸ்பா ஏஜாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான மஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #வேலூர்_தொகுதி #MJK_IT_WING 26.03.2024
மஜக தலைமையகத்திற்கு… தமிழ் கேள்வி செந்தில் வேல் வருகை! நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன் என்ற நூலை தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்…
மார்ச்.26., பிரபல ஊடகவியலரும், தமிழ் கேள்வி யூடியுப் நிறுவன ஆசிரியருமான திரு. செந்தில் வேல் அவர்கள் இன்று மஜக தலைமையத்திற்கு வருகை தந்தார். தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்தவர், தான் எழுதிய 'நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்'' என்ற நூலை வழங்கினார். தற்போதைய தேர்தல் களத்தில் இந்நூல் மிகப்பெரும் கருத்தாயுதம் என்ற தலைவர் அவர்கள், மஜக-வின் முன்னணி பரப்புரையாளர்கள் 100 பேருக்கு இந்நூலை வழங்குவதாக கூறினார். பிறகு தான் எழுதிய 'புயலோடு போராடும் பூக்கள்' என்ற கவிதை தொகுப்பை செந்தில் வேலுக்கு வழங்கினார். பிறகு இருவரும் சமகால தமிழ்நாடு அரசியல் குறித்து பேசினர். பிறகு மஜக தலைமையகத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்விலும், மஜக நிர்வாகிகளுடன் செந்தில் வேல் அவர்கள் பங்கேற்றார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 26.03.2024 https://www.facebook.com/share/p/yaK1JbSn5LvUGXvf/?mibextid=Nif5oz