திருப்பூரில்… மஜக இஃப்தார் நிகழ்ச்சி… இந்தியா கூட்டணி வேட்பாளர் கே சுப்பராயன் அறிமுகம்…

மார்ச்.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா அவர்கள் தலைமையில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் நெல்லை ரமேஷ் முன்னிலையில்
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள கே.கே. அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே சுப்பராயன் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்தி தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் அவர்கள் நாற்பது தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற கூடுதல் உழைப்பு அவசியம் எனவும் இதற்கு மஜக-வினர் முழுமையாக ஒத்துழைப்பு தருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.

மாநகர மேயர் ந.தினேஷ் குமார்
அவர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வேட்பாளர் நம் சுப்பராயன் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மஜக மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் அவர்கள் பேசும்போது தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஆணைக்கிணங்க திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றியை அறுவடை செய்யும் என உரையாற்றி அமர்ந்தார்.

இறுதியாக பேசிய வெற்றி வேட்பாளர் தோழர் கே.சுப்பராயன் அவர்கள் பாசிசம் வீழ இந்திய ஜனநாயகம் மாண்பை காக்க சமுதாய சமூக ஒற்றுமை என்றும் நிலைத்திருக்க இந்திய அளவில் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டிய அவசியம் குறித்து விரிவாக விவரித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் MJTS தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராயல் பாட்ஷா, பாரூக், யாசர் ஈஸ்வரன் சேக் அப்துல்லா, சேக்ஒலி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கீரனூர் பாபு, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பர்சாத், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் மாவட்ட பொருளாளர் முஹம்மது ஆசீப்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் வானவில் காதர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் ஜாபர்.மற்றும் உடுமலை நகர நிர்வாகிகளும் பல்லடம் நகர நிர்வாகிகளும் ஊத்துக்குளி ஒன்றியம் மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எழுச்சியோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மஜக செயல்பாட்டாளர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

அதைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி மண்டபத்தின் உள்ளும், புறமும் கூட்டம் திரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
26.03.2024.