மார்ச்.29., கோவை வருகை தந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், பொள்ளாச்சி - கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மஜக தேர்தல் பணி மனையை திறந்து வைத்தார். அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் 'பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி? என்ற நூலை அறிமுகப்படுத்த அதை அவர் பெற்றுக் கொண்டார். இதன் 100 பிரதிகளை தருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் கோவை ஜாபர், மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், மாநில இளைஞர் அணி பொருளாளர் கோவை ஃபைசல், மாநில துணைச் செயலாளர் ரமேஷ் தேவர், MJTS மாநில துணைச் செயலாளர் திருப்பூர் கண்ணன், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ராயல் ராஜா மற்றும் மஜக-வினர் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கோவை_மாவட்டம் 28.03.2024.
தமிழகம்
தமிழகம்
புனித ரமலானில்… நோன்பு கஞ்சியை சகோதர சமூகங்களுடன் பகிர்வோம்! நேசத்தை வளர்ப்போம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை…
புனிதமிக்க ரமலான் மாதம் இறை நேசத்தை, அன்பை, இரக்கத்தை, கருணையை போதிக்கும் மாதம். மனிதர்களிடம் இணக்கத்தை வளர்ப்பவர் சிறந்தவர் என திருக்குர்ஆன் கூறுகிறது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் புனித ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் போது, அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் அவர்களது உணர்வுகளை மதிக்கும் வகையில் நடப்பதை காண்கிறோம். மாலை 4 மணிக்கு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வினியோகிக்கப்படும் போது, சகல மதத்தவரும் அதை பெற்றுக் கொள்வதை பார்க்கிறோம். பள்ளிவாசல்கள், வீடுகளில் நடக்கும் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வுகளில் சகோதர சமுதாய உறவுகளுக்கு முஸ்லிம்கள் அழைப்பு விடுக்கிறார்கள். தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு இந்துக்களும், கிருஸ்தவர்களும் ரமலான் இனிப்பு - பதார்த்தங்களை அன்பளிப்பு செய்கின்றனர். இது நமது மண்ணின் கலாச்சாரமாகும். இதை வலுப்படுத்துவது நமது காலத்தின் கடமையாகும். எனவே உங்கள் பகுதியில் / குடியிருப்பு கட்டிடங்களில் / வீதிகளில் வாழும் சகோதர சமுதாய உறவுகளுக்கு - அவர்களின் வீடுகளுக்கு நோன்பு கஞ்சியை அனுப்பி வையுங்கள். சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கு அதற்கேற்ப தயாரித்து அனுப்புங்கள். அரசியலாளர்கள், சாதி - சமூக ஆளுமைகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் இந்த விருந்தோம்பலை செய்ய
நீலகிரி தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் பங்கேற்பு….
மார்ச்.29., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு. ஆ. ராசா அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் அவர்கள் பங்கேற்று வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் S.R. பாபுலால், MJTS ஜாகிர் கான், MJVS பாரூக், இளைஞர் அணி பாபு, நகர செயலாளர் சலீம் உட்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #நீலகிரி_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 28.03.2024.
கோவை… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு….
மார்ச்.29., இந்தியா கூட்டணி சார்பில் கோவை - பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்தல் பணிமனை மஜக சார்பில் கோவையில் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பனிமனையை திறந்து வைத்தார். அவருடன் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் N.கார்த்திக் EX.MLA., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, இளைஞர் அணி மாநில பொருளாளர் PMA.பைசல், MJTS மாநில துணைச் செயலாளர் கண்ணன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் மாவட்ட பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செயலாளர்கள் S.A. ஜாபர் சாதிக், H. ஹனிபா, A. அன்வர், KTU.காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் பயாஸ், சிராஜ், MMR. முஜீபுர் ரஹ்மான், ஹக்கிம், ஜாகிர், சலீம், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயர்குழு உறுப்பினர்கள் அபு, அபி, பைரோஸ், ரசீது, ஜகிர், பொள்ளாச்சி பகுதி செயலாளர் சம்சுதீன், தெற்கு பகுதி செயலாளர் சதாம் மற்றும் நவ்ஷாத், சகிர், ரபீக், உள்ளிட்ட மாவட்ட, அணி, கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளானோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில்… பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
மார்ச்.28., திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவண்ணாமலை_மாவட்டம் 28.03.2024.