நீலகிரி தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் பங்கேற்பு….

மார்ச்.29.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு. ஆ. ராசா அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் அவர்கள் பங்கேற்று வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் S.R. பாபுலால், MJTS ஜாகிர் கான், MJVS பாரூக், இளைஞர் அணி பாபு, நகர செயலாளர் சலீம் உட்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #நீலகிரி_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
28.03.2024.