கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதோடு, இலங்கை ஜாமியா நளிமியாஹ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டததை வரைந்தவர். அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
தமிழகம்
தமிழகம்
துபாயில்… MKP சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு… மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா பங்கேற்பு…
மார்ச்.30., ஐக்கிய அரபு அமீரக மண்டலம், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி துபாய் Hor_al_anz பகுதியில் உள்ள Annaporana உணவகத்தில் நடைபெற்றது. இது மனிதநேய சொந்தங்களுக்காக நடைபெற்ற ஒன்று கூடல் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வினை துபாய் மாநகரச் செயலாளர் லால்பேட்டை V.ஷபிக்குர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். துபாய் மாநகர துணைச் செயலாளர் நாச்சிகுளம் யாசிர், அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் துபாய் மாநகர துணைச் செயலாளர்கள் நாச்சிகுளம் ரசீது மற்றும் சித்திக் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் K.ராவுத்தர்ஷா, மற்றும் மாநில துணைச் செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அமீரக செயலாளர் ARY அப்துல் ரெஜாக் வாழ்த்துரை வழங்கினார். மேலும் அமீரக பொருளாளர் Z.பாயஸ் அஹம்மது, அமீரக IT wing செயலாளர் தோப்பு துறை ஜியாவுல் ஹக், அமீரக வர்த்தக அணி செயலாளர் பிலால் அஹமத், அமீரக இளைஞரணி செயலாளர் வடகரை சலீம், துணைச் செயலாளர் மதுரை
கோவையில் ஒரு ஜீவ சாந்தி… உணவு வினியோகத்தை தொடங்கி வைத்தார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி….
மார்ச்.29., கோவையில் ஜீவ சாந்தி என்ற தொண்டு அமைப்பு மனிதநேய - மத நல்லிணக்க பணிகளை முன்னெடுத்து வருகிறது. அனாதை பிணங்களை அவரவர் மத சடங்குகளின் படி அடக்கம் செய்வது, ஆம்புலன்ஸ் சேவை, ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியன அவர்களது முக்கிய பணிகளாகும். புனித ரமலானில் சகர் நேர விடிகாலை உணவை தேவையுடையோருக்கு வழங்கும் பணியை 30 நாட்களும் திறன்பட செய்து வருகின்றனர். 200 பேர் கொண்ட தொண்டூழியர்கள், 19 குழுக்களாக பிரிந்து தினமும் 6 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள். 650 கிலோ அரிசி சமைககப்பட்டு தினம் / தினம் சுவையாக விருந்து சமைக்கப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக செயல்படும் இவர்களுக்கு பொதுமக்கள் / வணிகர்கள் நிதியுதவி செய்கின்றனர். அவர்களின் 'அன்பாலயம் ' இல்லத்திற்கு இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்து இன்றைய சஹர் உணவு வினியோக பணியை தொடங்கி வைத்தார். பிறகு அதன் நிர்வாகிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்த காவல் துறை / வழக்கறிஞர் துறை / சமூக சேவை துறை / அரசுப் பணிகள் / தனியார் நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரியும் பெண்கள் தன்னர்வத்துடன் பணி புரியும்
ஆம்பூரில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி….
மார்ச்.29., மனிதநேய ஜனநாயக கட்சி, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.விஸ்வநாதன் MLA., ஆகியோர் பங்கேற்றனர். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் T.R. முன்னா(எ) நஸீர், I.கலீல் பாஷா, ஊராட்சி மன்ற உறுப்பினர் S.M.ஷாநவாஸ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் R.Z ஜூபேர் அஹ்மத், MJTS மாவட்ட செயலாளர் B. முபாரக் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் H. சையத் வசிம், ஆம்பூர் நகர செயலாளர் A. ஜீஷான் பாஷா, ஆம்பூர் நகர பொருளாளர் டிஷ் நாசிர் அஹ்மத் அலீம் மற்றும் மஜக ஆம்பூர் நகர துணைச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருப்பத்தூர்_மாவட்டம் 28.03.2024.
சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர்… மஜக மாவட்ட அலுவலகம் வருகை….
மார்ச்.29., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் சேலம் தொகுதி வெற்றி வேட்பாளர் TM.செல்வகணபதி அவர்கள் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று மஜக சேலம் மாவட்ட அலுவலகத்திற்கு வேட்பாளர் உடன் திமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் MLA., ஆகியோர் வருகை தந்து மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் இணைந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சேலம்_மாவட்டம் 29.03.2024.