ஏப்ரல்.3., திமுக துணைபொதுச் செயலாளரும், தூத்துகுடி நாடாளுமன்ற வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், நெல்லையில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். I.N.D.I.A கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டும், பாஜக-வின் மக்கள் விரோத போக்கை அம்பலபடுத்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அலிஃப் A.பிலால் ராஜா தலைமையில், மண்டல இளைஞர் அணி செயலாளர் அஷ்ரப், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால் சேக் மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு பொறுப்பாளர்கள் பேட்டை ராஜா, செய்யது உட்பட்ட நெல்லை டவுன் பேட்டை மானூர் ஒன்றியம் தாழையுத்து பகுதிகளைச் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தோழர்கள் கலந்து கொண்டனர். தகவல்: #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #நெல்லை_தொகுதி #MJK_IT_WING 03.04.2024.
தமிழகம்
தமிழகம்
வடசென்னை மேற்கு… அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…
ஏப்ரல்.03., I.N.D.I.A கூட்டணியின் வடசென்னை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களது தலைமையில் திரு.வி.க நகர் பகுதியில் இப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் இம்ரான் ஷரீஃப்,நிசார் அஹமது மற்றும் திரளான மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #வடசென்னை_தொகுதி #MJK_IT_WING 02.04.2024.
தென்சென்னையில்… அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…
ஏப்ரல்.03., I.N.D.I.A கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மத்திய சென்னையிலும், அதை தொடர்ந்து தென் சென்னையிலும் நடைபெற்ற பரப்புரையில் மஜக-வினர் கொடிகளுடன் அணி திரண்டதை பார்த்த உதயநிதி அவர்கள் மஜக-வினரை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தலைமையில் தென்சன்னை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், மாவட்ட பொருளாளர் நாகூரான், மாவட்ட துணைச் செயலாளர் ஆலந்தூர் கபீர் மற்றும் மாவட்ட, பகுதி மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வினர் கொடிகளுடன் மஜக சால்வை அணிந்து உற்சாகத்துடன் பங்கேற்றனர். தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #தென்சென்னை_தொகுதி #MJK_IT_WING 02.04.2024.
மத்திய சென்னையில்… வேட்பாளருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் மஜகவினர்…
ஏப்ரல்.02., மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தொண்டர் படையினரும் பொறுப்பாளர்களில் ஒருவரான பாலவாக்கம் அலி தலைமையில் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இந்த தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூட வைப்பது மஜக-வினரின் கடமை என்று நிர்வாகிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மத்தியசென்னை_தொகுதி #MJKitWING #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.04.2024.
தஞ்சாவூரில் பரப்புரை! இது மற்றுமொரு தேர்தல் அல்ல… மாற்றத்திற்கான தேர்தல்! தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலியை ஆதரித்து ….. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை….
ஏப்ரல்.02., மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 2024 - நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்கினார். தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திரு.முரசொலி அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவையாறு மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளில் திறந்த ஜீப்பில் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை.சந்திரசேகர் MLA, ஆகியோர் பங்கேற்றனர். மேல திருப்பந்துருத்தி, கீழ திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை, திருவையாறு ஆகிய இடங்களில் திரளாக கூடியிருந்த மக்கள் குழுமத்தில் ஆங்காங்கே தலைவர் அவர்கள் பேசினார். அப்போது பேசியதாவது... இது வழக்கமான மற்றுமொரு தேர்தல் அல்ல. இது மாற்றத்திற்கான தேர்தல். ஏப்ரல் 19 என்பது மற்றவர்களுக்கு வாக்களிக்கும் நாள். நமக்கு நாட்டை காப்பாற்றுவதற்கான நாள். இது ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையேயான சித்தாந்த போராட்ட களம். ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் போராடுகிறோம். மீண்டும் மோடி வரக்கூடாது என்பதற்கான எதிர்ப்பலை நாடெங்கும் உருவாகி விட்டது. அவர் மீண்டும் வெற்றிப் பெற்றால் கூட்டாட்சி தத்துவம் சிதைந்து விடும். பன்மை கலாச்சாரம் அழிந்து விடும். மாநில தன்னாட்சி சிந்தனைகள் ஒழிக்கப்பட்டு விடும். கவர்னரின் அதிகாரம் கூட்டப்பட்டு, மக்களால் தேர்வு செய்யப்படும் அரசில்