வடசென்னை மேற்கு… அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…

ஏப்ரல்.03.,

I.N.D.I.A கூட்டணியின் வடசென்னை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களது தலைமையில் திரு.வி.க நகர் பகுதியில் இப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் இம்ரான் ஷரீஃப்,நிசார் அஹமது மற்றும் திரளான மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#வடசென்னை_தொகுதி
#MJK_IT_WING
02.04.2024.