ஏப்ரல்.02.,
மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 2024 – நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்கினார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திரு.முரசொலி அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவையாறு மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளில் திறந்த ஜீப்பில் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தார்.
அவருடன் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை.சந்திரசேகர் MLA, ஆகியோர் பங்கேற்றனர்.
மேல திருப்பந்துருத்தி, கீழ திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை, திருவையாறு ஆகிய இடங்களில் திரளாக கூடியிருந்த மக்கள் குழுமத்தில் ஆங்காங்கே தலைவர் அவர்கள் பேசினார்.
அப்போது பேசியதாவது…
இது வழக்கமான மற்றுமொரு தேர்தல் அல்ல. இது மாற்றத்திற்கான தேர்தல்.
ஏப்ரல் 19 என்பது மற்றவர்களுக்கு வாக்களிக்கும் நாள். நமக்கு நாட்டை காப்பாற்றுவதற்கான நாள்.
இது ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையேயான சித்தாந்த போராட்ட களம்.
ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் போராடுகிறோம்.
மீண்டும் மோடி வரக்கூடாது என்பதற்கான எதிர்ப்பலை நாடெங்கும் உருவாகி விட்டது.
அவர் மீண்டும் வெற்றிப் பெற்றால் கூட்டாட்சி தத்துவம் சிதைந்து விடும். பன்மை கலாச்சாரம் அழிந்து விடும். மாநில தன்னாட்சி சிந்தனைகள் ஒழிக்கப்பட்டு விடும்.
கவர்னரின் அதிகாரம் கூட்டப்பட்டு, மக்களால் தேர்வு செய்யப்படும் அரசில் முதல்வருக்கான அதிகாரம் குறைக்கப்படும்.
எனவேதான் ஜனநாயகம் காக்க இத்தேர்தலில் போராடுகிறோம்.
இவ்வாறு இன்றைய பரப்புரைகளில் அவர் பேசினார்.
நிறைவாக தஞ்சாவூர் கீழ வாசலில் பரப்புரை முடிவுற்றது.
அப்போது நீலமேகம் MLA, மேயர் சன். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தலைவர் அவர்களுடன் மஜக மாநிலச் செயலாளர் அகமது கபீர் அவர்களும் பங்கேற்றார்.
மாவட்டச் செயலாளர் வல்லம். ரியாஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஆசிப் @ சாகுல் ஹமிது, ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், தஞ்சை அப்துல்லாஹ், சேக் தாவுது, தஞ்சை மாநகர நிர்வாகிகள் முபின், காமில், காசிம், சாகுல் ஹமீது, அஜய் குமரன், கிங்ஸ்லி, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனங்களில் கொடிகளுடன் அணிவகுத்தனர்.
தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#தஞ்சை_பாராளுமன்ற_தொகுதி
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJKitWING
02.04.2024.