மாணவர் இந்தியாவின் மாநில பொருளாளராக, மு.நிசாத் அம்ரித் அன்சார் 1/107 D2 வளையல் காரத் தெரு, ஏனங்குடி, நாகை அலைபேசி; 83442 42608 மாணவர் இந்தியாவின் மாநில துணைத்தலைவராக, S.முகமது பைசல் M.COM த/பெ; A .சுஜ்ஜாவுதீன் 281, பூதக்கேணி மெயின் ரோடு, பள்ளிப்படை சிதம்பரம் 608001 அலைபேசி; 95972 40149 ஆகியோர் நியமனம் செய்ய படுகிறார்கள், மாணவ சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இவண்; S.பஷீர் அஹமத் M.B.A மாணவர் இந்தியா மாநில தலைவர் 10.04.2024.
தமிழகம்
தமிழகம்
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்…. அமைதி நிலவட்டும்! சகோதரத்துவம் ஒங்கட்டும்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை….
200 கோடி மக்களால் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனும் ஈகைத்திருநாள் உலகெங்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும்; பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள்; ஒரே இறைவன் என்ற கோட்பாட்டுடன் கொண்டாடி மகிழும் திருநாள் இது. புனித ரமலான் மாதம் முழுதும் இறைவனின் திருப்தியை பெற நோன்பிருந்தவர்கள்; நிறைவாக, நீலவானில் வெண் கீற்றாய் தென்படும் தலைப்பிறையை பார்த்ததும் அடையும் பேரானத்தத்திற்கு அளவேயில்லை. இணையற்ற இறைவனை; தொழுது வணங்கிய இன்ப பொழுதுகளில் மூழ்கி திளைத்தவர்கள்; இப்பெருநாளை முன்னிட்டு கரங்கள் சிவக்க ஏழை-எளியோருக்கு வாரி வழங்கி மகிழும் பொதுவுடைமை சிந்தனைகள்; இத்திருநாளின் சிறப்புகளை அலங்கரிக்கின்றன. இந்த இனிய நாளில் பாலஸ்தீன பூமியாம் காஸாவின் மீதான இஸ்ரேலிய தாக்குதலும், ரஷ்யா - உக்ரேன் போரும் முடிவுக்கு வரவும், உலகமெங்கும் அமைதி நிலவவும் பிரார்த்திப்போம். நம் இந்திய திருநாட்டில் சகோதரத்துவம் ஒங்கவும், நல்ல ஆட்சியாளர்கள் அதிகாரம் பெறவும் உறுதி ஏற்போம். அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி 10.04.2024.
ராமநாதபுரம் தொகுதி…. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பரப்புரை… மஜக வினர் திரளாக பங்கேற்பு….
ஏப்ரல்.10., ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி MP அவர்களை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி MP அவர்கள் சாயல்குடி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் ராமநாதபுரம் (மேற்கு) மாவட்டச் செயலாளர் கனி தலைமையில் மாவட்டம் முழுவதிலிமிருந்தும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கொடிகளுடன் திரண்டு வந்தனர். மஜக-வினர் திரளாக வந்திருந்ததை பார்த்த திமுக பிரமுகர்கள், தொடர்ந்து இத்தொகுதியில் மஜக-வினர் உற்சாகமாக பணியாற்றுவதாக கூறி பாராட்டினர். மேலும் மஜக-வினருடைய எழுச்சியை பார்த்த கனிமொழி அவர்கள் மஜக மாவட்ட செயலாளர் அவர்களை அழைத்து பாராட்டி விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மீசல் கனி, கிழக்கு மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், பொருளாளர் மீரான் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ராமநாதபுரம்_மேற்கு_மாவட்டம் 09.04.2024.
MKP நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) சவூதி தம்மாம் மண்டல நிர்வாகிகளாக, மண்டல செயலாளராக, M.ஹஜ் முகம்மது B.sc த/பெ; முகம்மது ஆரிப் அலைபேசி: 050 999 0134 மண்டல அவைத் தலைவராக, A. அக்பர் அலி த/பெ; அபுபக்கர் அலைபேசி; 050 698 4741 மண்டல பொருளாளராக, A. ஜாகிர் உசேன் DCA த/பெ; அப்துல் ரஹிம் அலைபேசி; 0530 780 570 மண்டல துணைச் செயலாளர்களாக, 1) S.முகமது காசிம் B.COM த/பெ; சேக்தாவூது அலைபேசி; 0530475841 2) R.முகம்மது இலியாஸ் த/பெ; ரஹ்மத்துல்லாஹ் அலைபேசி; 054 889 5074 3) முகம்மது ஆரிஸ் MCA., த/பெ; ஹசன் முகம்மது அலைபேசி; 053 719 2557 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலின் பேரில் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.04.2024.
சத்தியமங்கலத்தில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…! இணை பொதுச்செயலாளர் செய்யது முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு….
ஏப்ரல்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் செய்யது முஹம்மது பாரூக் மற்றும் மாநில செயலாளர் பாபு ஷாஹின்ஷா ஆகியோர் பங்கேற்றனர். இதில் MJVS மாநில துணைச் செயலாளர் எக்ஸானுல்லாஹ், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக் மற்றும் ஜமாத்தார்கள், சான்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 08.04.2024.