ராமநாதபுரம் தொகுதி…. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பரப்புரை… மஜக வினர் திரளாக பங்கேற்பு….

ஏப்ரல்.10.,

ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி MP அவர்களை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி MP அவர்கள் சாயல்குடி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் ராமநாதபுரம் (மேற்கு) மாவட்டச் செயலாளர் கனி தலைமையில் மாவட்டம் முழுவதிலிமிருந்தும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கொடிகளுடன் திரண்டு வந்தனர்.

மஜக-வினர் திரளாக வந்திருந்ததை பார்த்த திமுக பிரமுகர்கள், தொடர்ந்து இத்தொகுதியில் மஜக-வினர் உற்சாகமாக பணியாற்றுவதாக கூறி பாராட்டினர்.

மேலும் மஜக-வினருடைய எழுச்சியை பார்த்த கனிமொழி அவர்கள் மஜக மாவட்ட செயலாளர் அவர்களை அழைத்து பாராட்டி விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மீசல் கனி, கிழக்கு மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், பொருளாளர் மீரான் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ராமநாதபுரம்_மேற்கு_மாவட்டம்
09.04.2024.