தற்போது (இரவு 12 மணி) நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,புதுச்சேரி, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவண்ணாமலை , மாவட்ட மஜக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடர்பு கொண்டு நலன் விசாரித்தார். காலை 6 மணி வரை வீட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் வெளியே வராமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். காலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தான் பேசுவதாகவும் கூறினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 26.11.2020
நிவர் புயல்
நாகையில் நிவர்புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்! களத்தில் மு தமிமுன் அன்சாரி MLA!
நவ 25 நாகை தொகுதியில் நிவர் புயல் மற்றும் கடும் மழையை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். திருமருகல் ஒன்றியம், நாகை ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நேற்றும், நேற்று முன் தினமும் சுற்றுப்பயணம் செய்தவர், இன்று VA0 உள்ளிட்ட அதிகாரிகளிடம் அலைபேசி வழியாக பேசி பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். இன்று மதியம் அக்கறை பேட்டை படகுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்று பார்வையிட்டார். பிறகு நம்பியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களையும், பஞ்சாயத்தாரகளையும் சந்தித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். நாகை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து நகராட்சி ஊழியர்களின் பணிகளை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார். பிறகு நாகூருக்கு சென்று பட்டினச்சேரி மீனவர்கள் தங்கியிருக்கும் முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து நாகூரில் அம்பேத்கார் நகர், வண்டிப்பேட்டை, மணல்மேடு பகுதிகளுக்கு சென்றார் அங்கு மஜக பேரிடர் மீட்புக் குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக தங்கிட,தாசில்தாரிடம் பேசி நேஷனல் பள்ளிக்கூடத்தை
நிவர்புயல் : வடசென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது நேரில் ஆய்வு..!
நிவர் புயலால் ஏற்படும் தொடர் தீவிர கன மழையின் காரணமாக வடசென்னை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது அப்பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் பார்வையிட்டு, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்களை தொடர்பு கொண்டு நிலவரங்களை எடுத்துரைத்தார்.. பொருளாளர் உடன் மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, மாவட்ட செயலாளர் அன்வர், ஹனிப், யூசுப் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #CycloneNivar #களத்தில்_மஜக 25-11-2020
நிவர்புயல் : அதிரை பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்த வயதானவர்களை மீட்டு முகாமில் தங்கவைத்த மஜகவினர்.!
நிவர் புயல் கரையை கடக்கும் இச்சூழலில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொண்டியை சேர்ந்த வயதான ஒரு ஆண் இரண்டு பெண்கள் பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீட்டு மஜக ஆம்புலன்ஸ் மூலம் புயல் பாதுகாப்பு முகாமிற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #CycloneNivar #களத்தில்_மஜக #நிவர்_புயல் #மஜக_பேரிடர்_மீட்புகுழு
நாகை நாகூர் பகுதிகளில் கழிவு நீர் வெளியேற்றும் பணி தீவிரம்! மு தமிமுன் அன்சாரி MLA நேரில் பார்வையிட்டார்!
நவ 25, இன்று மதியம் முதல் நாகையில் கனமழை தொடங்கியுள்ளது. நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மழையால் நிறைந்து வழியும் கால்வாய்களை தூர் வாரும் நகராட்சி ஊழியர்களின் பணிகளை பார்வையிட்டார். நாகை மற்றும் நாகூரில் கடும் மழையிலும் நகராட்சி ஊழியர்கள் ஆற்றும் பணிகளுக்காக அவர்களை பாராட்டி உற்சாகமூட்டினார். தகவல், #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் #CycloneNivar #களத்தில்_மஜக #நிவர்_புயல் #மஜக_பேரிடர்_மீட்புகுழு