நவ 25
நாகை தொகுதியில் நிவர் புயல் மற்றும் கடும் மழையை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமருகல் ஒன்றியம், நாகை ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நேற்றும், நேற்று முன் தினமும் சுற்றுப்பயணம் செய்தவர், இன்று VA0 உள்ளிட்ட அதிகாரிகளிடம் அலைபேசி வழியாக பேசி பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
இன்று மதியம் அக்கறை பேட்டை படகுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்று பார்வையிட்டார்.
பிறகு நம்பியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களையும், பஞ்சாயத்தாரகளையும் சந்தித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாகை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து நகராட்சி ஊழியர்களின் பணிகளை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார்.
பிறகு நாகூருக்கு சென்று பட்டினச்சேரி மீனவர்கள் தங்கியிருக்கும் முகாமை பார்வையிட்டார்.
தொடர்ந்து நாகூரில் அம்பேத்கார் நகர், வண்டிப்பேட்டை, மணல்மேடு பகுதிகளுக்கு சென்றார்
அங்கு மஜக பேரிடர் மீட்புக் குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக தங்கிட,தாசில்தாரிடம் பேசி நேஷனல் பள்ளிக்கூடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பிறகு நாகூரின் பிரதான சாலையின் இரு பகுதிகளிலும் உள்ள வீதிகளுக்கு மழையோடு பயணித்தவர், ஆங்காங்கே நகராட்சி ஊழியர்களின் பணிகளையும் பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினார்.
பிறகு MLA அலுவலகம் வந்து அங்கிருந்தவாறு தொகுதியில் உள்ள பலருக்கும் போன் செய்து நிலவரங்களை கேட்டறிந்தார்.
நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு நகராட்சி பணிகள் குறித்தும் விசாரித்தார்.
நகரின் பல்வேறு சேவை அமைப்புகளை சேர்ந்தவர்களையும் தொடர்பு கொண்டு நடப்பு நிலவரம் குறித்த பணிகளை பகிர்ந்துக் கொண்டார்.
தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
#Cyclone_Nivar
#களத்தில்_மஜக
#நிவர்_புயல்
#மஜக_பேரிடர்_மீட்பு_குழு