நிவர் புயல் மற்றும் கன மழையால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை முதல் கட்டமாக புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பும் பணியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் மேற்பார்வையில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #களத்தில்_மஜக #மஜக_பேரிடர்_மீட்புகுழு #CycloneNivar
நிவர் புயல்
சென்னை ஆலந்தூரில் குளிரால் உயிரிழந்த முதியவர்..! உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துவரும் மஜகவினர்..!
நிவர் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் சென்னையில் இன்னமும் குறையவில்லை. ஆலந்தூர் பகுதியில் தனியாக இருந்த முதியவர் ஒருவர் கடும் குளிரால் சுயநினைவின்றி இருப்பதாக மஜக பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் கிடைக்க. உடனடியாக அங்கு சென்று மஜகவினர் முதலுதவி செய்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு நடமாடும் ICU வாகனத்தை உடனே வரவழைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அம்முதியவர் உயிரிழந்தார், முதியவரின் குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்க நாட்டில் இருப்பதால் அடக்கம் செய்வதற்கான ஏற்பாட்டையும் மஜகவினர் முன்னின்று செய்து வருகின்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_பேரிடர்_மீட்புகுழு #களத்தில்_மஜக #CycloneNivar
நிவர்புயல் எதிரொலி: முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக களத்தில் குடியாத்தம் ஒன்றிய மஜக பேரிடர் மீட்பு குழு.!
நிவர் புயல் தாக்கத்தினால் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடியாத்தம் ஒன்றியம் கொல்லப்பள்ளி பகுதி கோட்டாறில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் மஜக ஒன்றிய செயலாளர் T.M.சலீம் EX MC அவர்கள் உடனடியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்ததின் பெயரில் Deputy P.D.O தமிழரசன், R.I.தனலட்சுமி, VAO.காந்தி வசந்த ராஜ் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து போர்க்கால அடிப்படையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் செல்லாமல் இருக்க ஜெ.சி.பி இயந்திரம் மூலம் சீர் செய்தனர். #மஜக_பேரிடர்_மீட்பு_குழு #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் #CycloneNivar
நிவர்புயல் களத்தில் மஜக குடியாத்தம் பேரிடர் மீட்பு குழு.!
நிவர் புயல் தாக்கத்தினால் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடியாத்ததின் பல்வேறு முக்கிய தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, இந்நிலையில் MBS மற்றும் சக்தி நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக தேவையான மீட்பு பணிகளில் களமிறங்கி மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர். மேலும் வெள்ள நீர் தடையின்றி வெளியேற ஏதுவாக கால்வாய்களை சரி செய்யும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் தாழ்வான வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகளை தொடர்பு கொண்டு மஜகவினர் கேட்டுக்கொண்டனர். #மஜக_பேரிடர்_மீட்பு_குழு #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் #CycloneNivar
நிவர்புயல்!! வில்லிவாக்கம் கொளத்தூர் பகுதிகளில் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது நேரில் பார்வையிட்டார்!!
நிவர் புயலால் ஏற்படும் தொடர் தீவிர கன மழையின் காரணமாக மத்தியசென்னை மேற்கு மாவட்டத் திற்குட்பட்ட பெரம்பூர் , கொளத்தூர் , வில்லிவாக்கம் பகுதிகளில் குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது அப்பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் நேரில் பார்வையிட்டு, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பொருளாளர் உடன் மாநில துணை செயலாளர்கள் ஷமீம் அகமது, புதுமடம் அனிஸ் , மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் , யாசீன் மற்றும் ஹனீபா , உள்ளிட்டோர் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #CycloneNivar #களத்தில்_மஜக 25-11-2020