You are here

நிவர்புயல்!! வில்லிவாக்கம் கொளத்தூர் பகுதிகளில் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது நேரில் பார்வையிட்டார்!!


நிவர் புயலால் ஏற்படும் தொடர் தீவிர கன மழையின் காரணமாக மத்தியசென்னை மேற்கு மாவட்டத் திற்குட்பட்ட பெரம்பூர் , கொளத்தூர் , வில்லிவாக்கம் பகுதிகளில் குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது அப்பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் நேரில் பார்வையிட்டு, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பொருளாளர் உடன் மாநில துணை செயலாளர்கள் ஷமீம் அகமது, புதுமடம் அனிஸ் , மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் , யாசீன் மற்றும் ஹனீபா , உள்ளிட்டோர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#CycloneNivar
#களத்தில்_மஜக
25-11-2020

Top