டிச.30, கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம் நகர செயலாளர் ரிபாய் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸ்ரப் மற்றும் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
உறுப்பினர் சேர்க்கை
லால்பேட்டையில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
டிச.30, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் ஏரிக்கரை சாவடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலர் தங்களை ஆர்வமுடன் மஜக உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில், மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
மஜக வடசென்னை மேற்கு மாவட்டம்_சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்..! மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ் பங்கேற்பு…!
சென்னை.டிச.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை (மேற்கு) மாவட்டம் சார்பாக 72-வது வட்டத்தில் மாவட்டச்செயலாளர் அன்வர் தலைமையில் தீவிர உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துனைச்செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் பங்கேற்று நிகழ்வினை துவக்கிவைத்தார். முகாமில் பலரும் தன்னார்வத்துடன் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டு, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் அக்பர், மாவட்ட துணைச் செயலாளர் ரசாக், ஹனிப், பகுதி செயலாளர் யூசுப்பேக், பகுதி பொருளாளர் செல்வம், 72வது வட்ட செயலாளர் பாஷா மற்றும் சதாத், சான், ஷாஜஹான், சலீம், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனா். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 27-12-2020
ஈரோடு மஜக சார்பில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஈரோடு:டிச.26., ஈரோடு மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட துணை செயலாளர் பக்கீர் முகமது, அவர்கள் தலைமையில் அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சபர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பயாஸ், அக்ரஹார பகுதி செயலாளர் ஜாவித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதற்கு திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மாநகர்_மாவட்டம் 25.12.2020
புதுப்பட்டினத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
டிச.25, தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட துணைச்செயலாளர் ஜெஹபர் சாதிக் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களை மஜகவில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். மாவட்ட செயலாளர் அதிரை சேக் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இதில், புதுப்பட்டினம் நகர செயலாளர் இப்ராஹிம்ஸா, அதிரை நகர துணைச் செயலாளர் மர்ஜூக் உள்பட திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.