ஈரோடு மஜக சார்பில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஈரோடு:டிச.26.,

ஈரோடு மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட துணை செயலாளர் பக்கீர் முகமது, அவர்கள் தலைமையில் அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சபர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பயாஸ், அக்ரஹார பகுதி செயலாளர் ஜாவித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதற்கு திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மாநகர்_மாவட்டம்
25.12.2020