டிச.01, திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு - ஆதிரெங்கம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், ஒன்றிய செயலாளர் அசீம் அலிம், நகர செயலாளர் பஷிர் மற்றும் ஆசிப், தெளபிக், ஹாரிஸ், யாசிர் மாலிக் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
உறுப்பினர் சேர்க்கை
கண்டியூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு @ ஹபீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் பதிவு செய்து கொண்டனர். இதில் கண்டியூர் நகர செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் ஹாரிஸ், திருப்பந்துருத்தி நகர செயலாளர் முஹம்மது காலித் உள்பட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
கறம்பக்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரிய பள்ளிவாசல் அருகில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இம்முகாமில் கறம்பக்குடி அத்தய்யிபா பள்ளி இமாம் முஹம்மது கலீலுர்ரஹ்மான் உலவி ஹஜ்ரத் அவர்கள் உள்பட ஜமாத் பெரியவர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில் கறம்பக்குடி நகர நிர்வாகிகள் உள்பட மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்.
கோவை ஆத்துப்பாலத்தில் மஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
கோவை:ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 ஆவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கோவை கிணத்துக் கடவு பகுதிக்குட்பட்ட ஆத்துப்பாலத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களை மஜக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன், அன்சர், மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 01.01.2021
வேலூர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்!! மூன்றாம் கட்டமாக உற்சாகமாக நடைபெற்றது.!!
ஜனவரி.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாநகரம் சைதாப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் பங்கேற்றார், உடன் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், இளைஞர் அணி செயலாளர் அமீன், குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர் ஷேக் இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜகவில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சில இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஸ்கர் அலி, வஸீம் அக்ரம், ஆசிப், அப்ரோஸ், சையத் ரபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் இம்முகாமில் சைதாப்பேட்டை, கொணவட்டம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #MJK2021 #வேலூர்_மாவட்டம். 01.01.2021