முற்போக்கு திரை இயக்குநர் தோழர் ஜனநாதன் மறைவு வேதனையளிக்கிறது. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக #மஜக நடத்திய பதாகை ஏந்தும் போராட்டத்தில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் அவர். சிறந்த படைப்பாளியை தமிழகம் இழந்திருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!
இரங்கல்
கோவை சிங்காநல்லூர் கிளை மஜக நிர்வாகி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி சிங்காநல்லூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் சகோதரர் ரியாஸ் பாய் , அவர்கள் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிழைகளை, குறைகளை இறைவன் மன்னித்து அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 14.03.2021
அப்துல்கலாம் அண்ணன் முத்துமீரான் மரணம்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் பெரியவர் முத்து மீரான் மரைக்காயர் அவர்கள் தனது 104 வது வயதில் மரணம் அடைந்த செய்தியறிந்து வருத்தமடைகிறோம். தந்தையின் மரணத்திற்கு பின்னால் குடும்பத்தை வழி நடத்தி ; தன் அருமை தம்பியார் அப்துல் கலாமை தகுதிமிக்க நிலைக்கு உயர்த்தியதில் பெரும் பங்காற்றியவர் என்பதும், மேதகு அப்துல் கலாம் அவர்கள் தனது நூல்களில் இவரது நேசத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதும்; இவரது நேர்மைமிகு எளிமையான வாழ்வும் இவரை மரியாதைக்குரியவராக நம் மனங்களில் உயர்த்தியது. நிறை வாழ்வு வாழ்ந்து விடை பெற்றிருக்கும் அன்னாரின் பிழைகளை; குறைகளை மன்னித்து அவரது மறு உலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ராமேஸ்வர தீவு மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 08.03.2021
தோழர் தா பாண்டியன் மரணம்! படை கருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஃபாஸிசத்திற்கு எதிரான பீரங்கியாகவும் வலம் வந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். நேற்று மதியம் அவரது உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, தகவலறிந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அவர் நினைவிழப்பதற்கு சற்று முன்பு, சிவப்பு துணியால் அவரது உடலை போர்த்த சொன்னதாக தோழர்கள் உணர்ச்சி மேலிட கூறினார்கள். அவர் கொள்கையில் உறுதியும், குருதியில் போர் குணமும் கொண்ட அரசியலாளர் என்பதை உயிர் ஊசலாடும் நேரத்திலும் நிருபித்திருக்கிறார். சமீபத்தில் மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அவரது கர்ஜனை உரை அதிகார வர்க்கத்தின் கதவுகளை உடைக்கும் விதத்தில் இருந்ததாக அனைவரும் பாராட்டுகின்றனர். தோழர் தா.பா. என தமிழக அரசியலில் கொண்டாடப்பட்ட அவரது பொது வாழ்வு போர்க்களங்கள் நிரம்பியதாகவே சிறப்பு பெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பல மேடைகளில் ஏறி; அரிய பல கருத்துகளை கூறி; அவர் ஆற்றிய உரைகள் எமது நினைவுகளை உசுப்புகின்றன. கடைசியாக கடந்தாண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் அவரை சந்தித்து பேசினேன். தளராத உறுதியோடு
கோட்டைப்பட்டினம் மஜக நிர்வாகி மரணம்! பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணல்மேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் கிளையின் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளர் சகோதரர் இப்ராகிம் (48) அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிழைகளை, குறைகளை இறைவன் மன்னித்து அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 22.01.2021