முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் பெரியவர் முத்து மீரான் மரைக்காயர் அவர்கள் தனது 104 வது வயதில் மரணம் அடைந்த செய்தியறிந்து வருத்தமடைகிறோம்.
தந்தையின் மரணத்திற்கு பின்னால் குடும்பத்தை வழி நடத்தி ; தன் அருமை தம்பியார் அப்துல் கலாமை தகுதிமிக்க நிலைக்கு உயர்த்தியதில் பெரும் பங்காற்றியவர் என்பதும், மேதகு அப்துல் கலாம் அவர்கள் தனது நூல்களில் இவரது நேசத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதும்; இவரது நேர்மைமிகு எளிமையான வாழ்வும் இவரை மரியாதைக்குரியவராக நம் மனங்களில் உயர்த்தியது.
நிறை வாழ்வு வாழ்ந்து விடை பெற்றிருக்கும் அன்னாரின் பிழைகளை; குறைகளை மன்னித்து அவரது மறு உலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ராமேஸ்வர தீவு மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
08.03.2021