கோவை.அக்.07.,மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் அதிகமான இரத்ததானம் செய்ததை பாராட்டி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதினை மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 07.10.17
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
நாச்சிகுளத்தில் மஜக சார்பில் நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
திருவாரூர்.அக்.06., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ சேவை அணியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம், நாச்சிகுளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை, டாக்டர் த.கல்யாண சுந்தரம் அவர்கள் துவைக்கி வைத்தார்கள். வருகை தந்த அனைவருக்கும் மஜக பொருப்பாளர்கள் அப்துல் ரஹ்மான், ஜெஹபர் சாதிக் ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கி உபசரித்தனர். இதில் நூர் மெடிக்கல் ராவுத்தர், ஜமாத் செயலாளர் அலாவுதீன், ரஹ்மத் மீரான், அப்துல் ரெஜாக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாச்சிகுளம் ரசீது அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். டெங்கு காய்ச்சல் பெண்கள் மற்றும் சிறு வயதினர்களை அதிகம் தாக்குவதால் இம்முகாமை பரவலாக நாச்சிகுளம் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனையேற்று தொடர் முகாம் நடத்துவதற்கான ஆலோசனையில் மஜகவினர் ஈடுபட்டுள்ளனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம்_கிளை