நெல்லை.ஆக.18., ஸ்டெர்லைட் ஆலை குறித்தான இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் கரிசல் சுரேஷ், மஜக மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, பேட்டை நகரச் செயலாளர் இரா.முத்துக்குமார், பொருளாளர் அசன் கனி, துணைச் செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர், தொழிற்சங்க செயலாளர் ஹபிபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தீர்ப்பிற்க்கு மகிழ்ச்சி தெரிவித்த மஜக-வினர், நெல்லையின் நீர்வளத்தை சுரண்டும் அயல்நாட்டின் குளிர்பான தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்க கோரிக்கை வைத்தனர். தகவல் #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 18-08-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
மஜக தென்காசி மாவட்டம் சார்பாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்!!
தென்காசி:ஆக.17., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட துணை செயலாளர் பொன்னானி அபுதாஹீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது இபுராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம் பின் ஹனிபா,வாவை இனாயத்துல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, பண்பொழி அபுதாஹிர், நகர மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க தலைவர் அபுபக்கர், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரகுமான், நகர பொருளாளர் முகம்மது கனி, நகர துணை செயலாளர் சிக்கந்தர் நகர மாணவர் இந்தியா செயலாளர் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 17.08.2020
இராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!!
ஆகஸ்ட்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒருநிகழ்வாக இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மஜக மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் பரமக்குடி நகரச் செயலாளர் சாகுல், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் ஹனிபா, IKP செயலாளர் சதக்கி ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #இராமநாதபுரம்_மாவட்டம் 17-08-2020
மக்கள் நல கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த விருதுநகர் மஜகவினர்!!
ஆக.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மக்கள் நல கோரிக்கைகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது.. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காவிலும் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் கணினிகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பற்றாக்குறையால் ஆதார் உள்ளிட்ட தேவைகளுக்காக வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள் அதை சரி செய்ய வேண்டும் எனவும். மேலும் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் மேலும் அங்கு சுகாதார சீர்கேடுகள் இருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது அதை சரி செய்ய வேண்டும் எனவும், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து மின் கம்பங்களும் அபாயகரமான நிலையில் உள்ளதால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்குமாறும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கட்சியின் பேச்சாளர் இனாயத்துல்லா, இக்பால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 17.08.2020
நீலகிரியில் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்த மஜகவினர்!!
நீலகிரி:ஆக17., இந்திய தேசத்தின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சிநீலகிரி கிழக்கு மாவட்டம் சார்பாக இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து உதகை அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் அமைப்புக்குழு தலைவர் காலிப், நிர்வாகிகள் கமாலுதீன், ஹமீது, தபேரேஸ், பைரோஸ், சாதிக், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 15/08/2020