தென்காசி:ஆக.17.,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர்.
அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட துணை செயலாளர் பொன்னானி அபுதாஹீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது இபுராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம் பின் ஹனிபா,வாவை இனாயத்துல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, பண்பொழி அபுதாஹிர், நகர மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க தலைவர் அபுபக்கர், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரகுமான், நகர பொருளாளர் முகம்மது கனி, நகர துணை செயலாளர் சிக்கந்தர் நகர மாணவர் இந்தியா செயலாளர் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
17.08.2020