சிதம்பரம். ஜூலை.07, கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிபடை மற்றும் பூதகேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான நவீன், அபுல் ஹசன், சைபுல்லாஹ், அஷ்ரப், ஹஜ்ஜி, ஹாலித் உள்ளிட்டோர் மஜகவின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் ஹாஜா மைதீன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பூதகேணி கிளை செயலாளர் யாசீன் முன்னிலையில் இணைந்தவர்களுக்கு மஜக நிர்வாகிகள் அட்டைகளை வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, அணி, சிதம்பரம் நகர, பரங்கிப்பேட்டை பேரூர், கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம். 06/07/2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
கோவை சிங்கை தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய மஜக வினர்!!
ஜூலை:06., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், ESI மருத்துவமனை, உப்பிலிபாளையம், சௌரிபாளையம், பகுதிகளில் மாவட்ட துணைச் செயலாளர் சிங்கை சுலைமான், அவர்கள் தலைமையில் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் முன்னாள் நிர்வாகிகள் M.I.ஹக்கீம், அபு, சுவனம் அபு, சிராஜுதீன், அசார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை, வழங்கினர். இதில் வணிகர்கள், வியாபாரிகள், ஓட்டுனர்கள், பொதுமக்கள், என சுமார் 1000க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம். 06.07.2020
நாகூரில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.06, நாகை மாவட்டம், நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தர்கா அலங்கார வாசலில் நகரச் செயலாளர் அபுசாலி சாஹிப் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முதற்கட்டமாக இந்நிகழ்வில் வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள் என சுமார் 250 க்கும் அதிகமானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடு,வீடாக விநியோகிக்கும் பணி நடைப்பெற உள்ளது. இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ஆரிஃப், நாகூர் ஜாகிர் உசேன், நகர பொருளாளர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் சவுக்கத்அலி, வார்டு செயலாளர்கள் சதாம் ஹுசைன், சம்சுதீன், ஹஜ்ஜி முஹம்மது உட்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 06/07/2020
தமிழினத்தின் முகவரியை அழிக்க நினைப்பவர்கள் படுதோல்வியை சந்திப்பார்கள்! – பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA
ஜூலை 5, மே 17 இயக்கம் சார்பில் "உரிமை மீட்க விழி தமிழா" என்ற தலைப்பில் ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை தொடர் இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி தலைமையேற்ற நிகழ்வில், காணொளி வழியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நிறைவுரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இனமான உரிமைக்காக போராடும் இயக்கமாக மே 17 இயக்கம் வளர்ந்து வருவதாக நாங்கள் கருதுகிறோம். தமிழ் தேசியத்தையும், திராவிட இயக்கத்தையும் இணைத்து பயணிப்பதாலேயே மே 17 இயக்கம் மீது நாங்கள் அதிகமாக நேசம் பாராட்டுகிறோம். இந்த தலைப்பில் காணொளி வழியாக தொடர் கருத்தரங்கை நடத்துவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வடக்கே உள்ள சிலருக்கு தமிழ்நாடு என்ற வார்த்தை கசக்கிறது. தமிழ், தமிழர் என்றாலே முகம் சுருங்குகிறது. பெரியாரின் பெயரை கேட்டால் கோபம் வருகிறது. திராவிட இயக்கம், தமிழ் தேசியம் என்ற கொள்கைகளை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை ஏற்காமல், தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொரோனா நெருக்கடியால் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை விரைந்து தமிழகத்திற்கு மீட்டு வரக்கோரி இன்று சமூக இணையதள போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதனையொட்டி தோழர் தி.வேல்முருகன் தலைமையில் Zoom வழியே காணொளி கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஐனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு... வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களுக்காக இன்று சமூக இணையதள போராட்டத்தை நடத்தி வரும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், அதன் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கும் எமது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரச்சனையை கையிலெடுத்து முதலில் மஜக சார்பில் இணையவழிப் போராட்டங்களையும், களப் போராட்டங்களையும் ஜூன் 3 முதல் 8 வரை முன்னெடுத்தோம். இதில் அரசியல் தலைவர்கள், திரை உலகத்தினர், மனித உரிமை களத்தினர், எழுத்தாளர்கள் என பலரும் பங்கேற்றனர். களப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றனர். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் அந்த இணைய வழி போராட்டத்தை வழி நடத்தினர். மலையாளிகளுக்கு அடுத்தப் படியாக தமிழர்கள்தான் வெளிநாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். கேரள அரசு மலையாளிகளை அழைத்து வருவதில் காட்டிய முனைப்பை தமிழக