ஜூலை.14, கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டதால் மலேசியாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர் அவர்களில் சிலரை மலேசியக் குடியுரிமை அதிகாரிகள் சரியான காரணம் இன்றி பிடித்து முகாம்களில் அடைத்தனர். மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூலம் அவர்களை மீட்க மஜக சார்பில் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்தது அலுவல் ரீதியாக உதவுமாறு கோரிக்கை வைத்தார். இந்நிலையில், முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டு 13.07.2020 அன்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வரவேற்றார். பொருளாளருடன் திருச்சி மாவட்டச் செயலாளர் பக்கிர்மைதீன் (எ) பாபுபாய், பொருளாளர் சேக்தாவுத், துணை செயலாளர்கள் M. பக்ருதின் , Er.காதர், தர்கா பாரூக், அரியமங்கலம் ஜமால், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மருத்துவ சேவை அணி செயலாளர் அபு, MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், MJTS செயலாளர் G.K.காதர், காட்டூர் ஷாரூக்கான் உள்ளிட்ட நிர்வாகிகள்
இஸ்லாமிய கலாச்சார பேரவை
வெளிநாட்டு தப்லீக் பயணிகள் ஹஜ் இல்லம் வருகை..! மஜக மாநில துணை பொதுச்செயலாளர் தைமிய்யா தலைமையில் மஜகவினர் சந்திப்பு..!
ஜூலை.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் முயற்சியால் 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் இன்று இரவு புழல் சிறார் சிறையில் இருந்து சென்னை ஹஜ் கமிட்டி இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களின் முதல் வாகனம் மாலை 5:30-க்கு புறப்பட்டதும் அதிகாரிகள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு தகவல் அளித்து விபரங்களை பகிர்ந்துக் கொண்டனர். அவர் இத்தகவலை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஸிபி மற்றும் பஷீர் ஹாஜியாரிடம் தெரிவித்தார். பிறகு ஹஜ் கமிட்டி இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா தலைமையில் நிர்வாகிகள் உடனே சென்று வருகை தந்த தப்லீக் ஜமாத்தினரை சந்தித்து பேசினர். அவர்கள் களைப்பு நீங்கி மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டனர். பின்னர் அங்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் திருமதி, சீத்தாலட்சுமி அவர்களிடம் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மஜகவினர் பேசினர். பின்னர் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்கள். அங்கு வருகை தந்த அனைத்து தப்லீக் பயணிகளுக்கும் தேவையான முகக்கவசங்கள் மஜக சார்பாக வழங்கப்பட்டது. அப்போது கூட்டமைப்பு
வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களுக்கான சிறப்பு ஏற்பாடு.! குமரி மாவட்ட மஜகவினர் மும்முரம்!
கன்னியாகுமரி.ஜூலை.13., வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வரும் தமிழக மக்களுக்கு உணவு மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்வது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையான e-pass வசதிகளையும் குமரி மாவட்ட மஜக-வினர் செய்து வருகின்றனர். இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச்செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நிர்வாகிகள் இன்று டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் அவர்களை சந்தித்து பேசினர். இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை மஜகவினர் எடுத்துரைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரினர். அவர் மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கு உண்டான சிறப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக வாக்களித்தார். இச்சந்திப்பின் போது மாவட்ட துணைச்செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ் மற்றும் மாநகரச் செயலாளர் அமீர்கான் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 13-07-2020
அரசு ஊழியர்களுக்கு ஹோமீயோபதி மாத்திரைகள் அதிரை மஜக சார்பில் விநியோகம்!
ஜூலை.13, அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமிஹோபதி மருந்தான 'அர்சானிக் ஆல்பம் 30' அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன. முதற்கட்டமாக காவல் துறை, பேரூராட்சி அலுவலர்கள், மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு நகர பொருளாளர் அஷ்ரப் தலைமையில் இம்மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர துணைச் செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அகமது அஸ்கர், தொழிற்சங்க செயலாளர் ஆரிப், தொண்டரணி செயலாளர் நபில், மாணவர் இந்தியா செயலாளர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்டமாக அதிரை பகுதியில் தேவைப்படும் பொதுமக்கள் மஜக வினரை கீழ்கண்ட தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டால் நேரில் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளனர். தொடர்புக்கு: 7010832030, 8667577437, 7530005823, 9976921145. தகவல் #மஜகதகவல்தொழில்நுட்பஅணி #MJKitWING #அதிரைநகரம், #தஞ்சைதெற்கு_மாவட்டம்.
மாணவர் இந்தியாவுடன் இணைந்து மஜகவினர் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.13, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மாணவர் இந்தியா மற்றும் மஜக இணைந்து அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின் தலைமையில் பொருளாளர் ஷாரூக்கான் முன்னிலையில் மஜக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகத்தைத் துவங்கி வைத்தார். முன்னதாக அறந்தாங்கி நகர செயலாளர் சேக் பரீத் அனைவரையும் வரவேற்றார். மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் உமர் ஃபாரூக், கலந்தர் மைதீன், முகம்மது அஸ்லம், அறந்தாங்கி நகர துணைச் செயலாளர்கள் முகம்மது இர்ஃபான், ராகிப் கான், அனஸ் தாஹா உள்ளிட்டோர் வீதிவீதியாக விநியோகித்தனர். மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து பாத்திரங்களை எடுத்துவந்து ஆர்வமுடன் கபசுர குடிநீரை பெற்று சென்றனர். நபர் ஒருவருக்கு 30 மி.லி என சுமார் 3000 நபர்களுக்கு விநியோகித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.