ஜூலை.13,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மாணவர் இந்தியா மற்றும் மஜக இணைந்து அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின் தலைமையில் பொருளாளர் ஷாரூக்கான் முன்னிலையில் மஜக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகத்தைத் துவங்கி வைத்தார்.
முன்னதாக அறந்தாங்கி நகர செயலாளர் சேக் பரீத் அனைவரையும் வரவேற்றார்.
மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் உமர் ஃபாரூக், கலந்தர் மைதீன், முகம்மது அஸ்லம், அறந்தாங்கி நகர துணைச் செயலாளர்கள் முகம்மது இர்ஃபான், ராகிப் கான், அனஸ் தாஹா உள்ளிட்டோர் வீதிவீதியாக விநியோகித்தனர்.
மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து பாத்திரங்களை எடுத்துவந்து ஆர்வமுடன் கபசுர குடிநீரை பெற்று சென்றனர். நபர் ஒருவருக்கு 30 மி.லி என சுமார் 3000 நபர்களுக்கு விநியோகித்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.