ஜூலை:20., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத் தொடர்ந்து மஜக கோவை மாநகர் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் இளைஞரணி சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கரும்புக்கடை, சாரமேடு, சலாமத் நகர், இலாஹி நகர், வள்ளல் நகர், பிலால் எஸ்டேட், பாத்திமா நகர், அல்-அமீன் காலனி, புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட், உக்கடம் பேருந்து நிலையம், உக்கடம் காவல் நிலையம், வின்சென்ட் ரோடு, ஹவுஸிங் யூனிட், பெருமாள் கோயில் வீதி ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், அபுதாஹீர், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் இப்ராஹீம், விவசாய அணி மாவட்ட செயலாளர் விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் செய்யது, மற்றும் M.I.அக்கீம், அபு, சுவனம் அபு,
இஸ்லாமிய கலாச்சார பேரவை
ஊரடங்கில் உணவின்றி தவித்த நோயாளிகளின் உறவினர்கள்! இலவசமாக உணவு தயார் செய்து விநியோகித்த மஜக!
ஜூலை.19, தமிழகமெங்கும் ஞாயிற்றுகிழமை அன்று முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உள்நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் வெளி நோயாளிகள் உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை அறிந்த திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் சுமார் 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து மாவட்ட செயலாளர் பாபுபாய் தலைமையில் விநியோகம் செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆழ்வார்தோப்பு காதர், பஜார் பக்ருதின், இளைஞரணி மாவட்ட செயலாளர் புரோஸ் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஷாருக்கான், இளைஞரணி நிசார், ரியாஸ்கான், முகமது ரியாஸ், ஆழ்வார்தோப்பு உசேன், மாமு ஜாகிர் உசேன், இஸ்மாயில் உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
கலவரங்களை தூண்டுவோரை தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி சிவகங்கை மஜகவினர் புகார் மனு..!
சிவகங்கை.ஜூலை.19., தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும் கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையில் சென்ற மஜக நிர்வாகிகள், இருவரையும் தனி தனியே சந்தித்து குறிப்பிட்ட புகார் மனுவை அளித்தனர். இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், இளையான்குடி நகர பொறுப்பாளர்கள் பஷிர் அகமது, சிராஜூதீன் மற்றும் நெய்னா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 18-07-2020
நோய் தொற்றால் இறந்த பச்சிளம் குழந்தை! மஜக மருத்துவ சேவை அணி சார்பாக உடலை பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.!
சென்னை.ஜூலை.18., சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தாய்க்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக, குழந்தை இறந்தே பிறந்தது. மருத்துவமனை நிர்வாகம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் மஜக மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நேரில் சென்று நோய் தொற்றால் இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை பெற்று நல்லடக்கம் செய்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சென்னை 18-07-2020
MKP கத்தார் மண்டலம் சார்பாக தமிழகர்களை மீட்டு அனுப்பும் பணிகள் தீவிரம்!
ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக கத்தாரில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று "மூன்றாம் கட்டமாக" 24 தமிழர்கள் தாயகம் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த கத்தார் மண்டல (MKP) நிர்வாகிகள், தாயகத்திற்கு அவர்களை வழியனுப்பி வைத்தனர். மேலும் தமிழகத்தில் மஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்ட கத்தார் மண்டல நிர்வாகிகள் அங்கு வரும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொண்டனர். மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பாக முன்னெடுக்கப்படும் இம்மகத்தான பணிகளை தமிழர்கள் வெகுவாக பாராட்டி, நன்றி தெரிவித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல், #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #MKP_IT_WING #கத்தார்_மண்டலம். 18/7/2020