ஜொஹர்.மே.18., இன்று மலேசியாவின் ஜொஹூர் பாரூ மாநகரில் #மஸ்ஜித்_இந்தியா (தமிழ் ஜமாத்) பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார்.
அவரை பள்ளிவாசல் தலைவர் டத்தோ.ஹாஜா மைதீன் அவர்களும், இமாம்கள் மெளலவி.ஹாபிழ்
சல்மான் பாரிஸ் மிஸ்பாஹி, மெளலவி.ஹாபிழ்
முஹம்மது யஹ்யா மிஸ்பாஹி ஆகியோரும் வரவேற்றனர்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற அந்த இஃப்தார் நிகழ்வில் பேசியவர், புனித ரமலானில் #பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது. 60க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கண்ணீரில் அங்கே ரமலான் கழிகிறது. விடுதலைக்கு ஏங்கும் #பாலஸ்தீன_மக்களுக்காக_இறைவனிடம்_பிரார்த்தியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். புனித ரமலானில் உலகெங்கும் அமைதி நிலவ பாடுபட வேண்டும் என்றார்.
பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன்.மஹாதீர் மீண்டும் பிரதமராகி இருப்பது உலகளவில் பேசப்படுவதாகவும், தமிழகத்திலும் எதிரொளிப்பதாகவும் கூறினார்.
மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற பணிகளை அனைவரும் வரவேற்று பேசினர்.
MKP – ஜொஹர் மாநகர நிர்வாகிகள் பீக்கர் அலி, அட்டாக் சுல்தான், அபுல் பரக்கத், சாஹுல் ஹமீது, அமீன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பொதுச்செயலாளரை சந்திக்க ஜொஹூர் மாநிலம் முழுவதும் உள்ள இந்திய பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
தகவல்;
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKP_IT_WING
#MKP_மலேசியா_ஜொஹூர்