நாடு முழுக்க எதிர்ப்புகளை சந்தித்த மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது. சாமானியர்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளே துணை நின்றன. இப்போது அதற்கும் பொது நுழைவுத் தேர்வு என்பது ஏற்க முடியாததாகும். நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி கடினமாக்கப்பட்டது போல, இது கலை, அறிவியல் படிப்புகளையும் கடினமாக்கிடும் முயற்சியாகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய தேர்வு முகமையின் மூலமே பொது நுழைவுத் தேர்வு என்ற முடிவு பெரும் பாதிப்புகளை உருவாக்கும். மும்மொழி கல்வி திட்டம் என்ற போர்வையில் மொழி ஆதிக்க திணிப்புக்கு திட்டமிடப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் தேசிய கல்வி ஆணையம் நாட்டின் அனைத்து கல்விகளுக்குமான உயர் பீடமாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் இது கண்காணிக்கும் என்பதோடு, கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பாடத் திட்டங்கள் உருவாக்கல் , நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்தையும் இதுவே தீர்மானிக்கும் என்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வித்துறைகளை செயலிழக்க
இஸ்லாமிய கலாச்சார பேரவை
கொரோனாவில் இறந்தவர்களின் முகத்தை பார்க்க குடும்பத்தினரை அனுமதிக்க_வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.!
கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களின் இறுதி சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின்படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளது. இது மதிக்கப்படும் அதே வேளையில், அக்குடும்பத்தினரின் நியாயமான சில எதிர்பார்ப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முக்கியமாக, இறந்தவர்களின் முகத்தை இறுதியாக பார்க்க சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நியாயமான விருப்பமாகும். தங்கள் பாசத்திற்குரியவர்களின் உயிர்களை இழந்து நிற்கும் உறவுகளின் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, இறந்தவர்களின் முகத்தை பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். பொது நலன் கருதி, அவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் வர நிபந்தனை விதிக்கலாம். இது குறித்து தமிழக அரசு மனிதாபிமானத்தோடு நல்ல முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 29.07.2020
கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
கோவை: ஜூலை.28 மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், என தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி ஜி.எம். நகரை சேர்ந்த சகோதரர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH. ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், ஆகியோர் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ், மற்றும் ஹக்கீம், அபு, சுவனம் அபு, ஆகியோர் உடனிருந்தனர்.. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 27/07/2020
கோவை செல்வபுரம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!
ஜூலை: 27., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட செல்வபுரம் பகுதியில் 77,78 மற்றும் 86 வார்டு ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், துணைச் செயலாளர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் EBR. இப்ராஹிம் , ஆயில் ஹக்கீம், PMA.பைசல், அக்கீம், ABS.அப்பாஸ், 77 வது வார்டு செயலாளர் பயாஸ், 78 வது வார்டு செயலாளர் ஜாகீர், 77 வது வார்டு பொருளாளர் அலி, துணைச்செயலாளர் பீர்முகமது, 78 வது வார்டு துணைச் செயலாளர் சகலை ரஃபி,தொழிற்சங்க செயலாளர் யூசுப், வணிகர் சங்க செயலாளர் ITS.சிக்கந்தர், 77 வது வார்டு முன்னாள் செயலாளர் இப்ராஹிம்,சலீம்,
முத்துக்கள் ஒளிரும் தீர்ப்பு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (0BC) வழங்க சட்டம் நிறைவேற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்று மகிழ்கிறது. இத்தீர்ப்பில் உள்ள பல வாசகங்களும், வரிகளும் முத்துக்களாக ஒளிர்கின்றன. மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றப் போது, அவற்றை மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத MCI , மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் இதை ஆட்சேபிக்க முடியாது என்றும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், MCI யும் தீர்மானிக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் MCI அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து, 3 மாதங்களில் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு பிற மாநிலங்களிலும் விழிப்புணர்வையும், சமூக நீதிக்கான எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பட்ட தீர்ப்பை நிச்சயம் எதிர்பார்த்திருந்திருக்காது. உள்ளுக்குள் இத்தீர்ப்பு குறித்து அதிர்ச்சியடைந்தவர்களையும், வரவேற்கும் நிலையை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் தமிழகத்தின் அரசியல் கொள்கையாகவும்,