காரைக்குடி:ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மஜகவில் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ், அவர்கள் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், எடுத்துரைக்கப்பட்டு ராஜா முகம்மது, அவர்கள் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயினுலாபுதீன், மற்றும் இளையான் குடி நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காரைக்குடி_நகரம் #சிவகங்கை_மாவட்டம் 22.8.2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 24 ஆண்டு காலம் போராடியவர் வைகோ!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தை பாராட்டும் வகையில் காணொளி கருத்தரங்கு நடைப்பெற்றது. அதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இந்த நிகழ்வு குறித்த விளம்பரத்தில் ஒரு இடத்தில் கூட பாராட்டு விழா என குறிப்பிடப்படவில்லை. இதை அண்ணன் வைகோ அவர்களும் விரும்பவில்லை என தெரிகிறது. ஆனாலும் நாம் அவரை பாராட்டுகிறோம் எனில், இதில் அவரது போர்குணமிக்க, சமரச மற்ற களப்பணிகள் இருப்பதால்தான். பல தலைவர்களும், கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் இதற்காக போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உத்வேகம் கொடுக்க கூடிய வகையில் அவரது உழைப்பு இருந்திருக்கிறது. பழிச் சொல்களையும், அவதூறுகளையும் தாங்கிக் கொண்டு போராடியிருக்கிறார். இதன் அபாயத்தை தூத்துக்குடி மக்களே உணராத காலத்தில், தமிழகத்தில் மற்ற எவரும் அறிந்திடாத நேரத்தில் இப்போராட்டத்தை தொடங்கி, 24 ஆண்டு காலமாக களமாடி வந்திருக்கிறார். இப்போது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருக்கிறார். அவரது நெடிய போராட்டங்கள் சிலிர்க்க வைப்பவை. 05.03.1996-ல் தூத்துக்குடியில் இந்த ஆலைக்கு எதிராக அவர் நடத்திய முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி
மஜக சார்பில் பள்ளிவாசலில் முககவசங்கள் விநியோகம்.!
ஆகஸ்ட்.22., திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கேந்தி ஊராட்சி பகுதியாகும், இங்கு 10 ஆயிரத்திற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட பள்ளிவாசல் இயங்குவதால், சமூக இடைவெளியுடன் அரசு விதிகளை பின்பற்றி தொழுகை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா சிறப்பு தொழுகையை முன்னிட்டு, பள்ளிவாசல் அருகில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முக கவசங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பணியை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். இந்நிகழ்வில் கிளை செயலாளர் அன்வர் தலைமையில் தாவூத் உள்ளிட்ட மஜகவினர் முக கவசங்களை விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 21-08-2020
மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பில் 90 சதவீதம் முன்னுரிமை! தமிழக அரசு சட்டம் இயற்ற மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!
நடுவண் அரசின் அமைச்சரவை கூட்டத்தில் 19.08.2020 அன்று மத்திய அரசின் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமை (NRA) அமைக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணிகளில் சேர்பவர்களுக்கு இது எளிதானது போல தோன்றினாலும், இது மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணயங்களை பலமிழக்க செய்யக் கூடிய ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இது பற்றி கூறியுள்ள ஒரு கருத்து பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. தற்போது ரயில்வே, வங்கி பணி, மத்திய அரசின் பணியாளர் தேர்வுத்துறை ஆகியவற்றுக்கு நடைபெறும் இத்தேர்வு மத்திய அரசின் இதர துறைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றுள்ளார். இனி வரும் காலங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்வாணயங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் , இதில் பெறும் தகுதி தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு பணியாளர் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஆக ஒரு வேலை வாய்ப்பு பணிக்கு இரண்டு தேர்வுகள் என்ற நிலையும் இதன் மூலம் திணிக்கப்படுகிறது. இந்த தேர்வு என்பது CBSE, NCERT பாடத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படும் என்கிறார்கள். அப்படியெனில், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களின் படி படித்த மாணவர்களின் நிலை என்னவாகும்?
மலேசியாவில் சாலை விபத்தில் பலியானவர் உடலை அடக்கம் செய்த மஜகவினர்.!
மலேசியா.ஆக.22., மலேசியாவில் ஜொஹர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு அவரது உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ரியாஸ் அவர்களிடம் கோரினர். அதனடிப்படையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மஜக சார்பு அமைப்பான ஜொஹர் மனிதநேய கலாச்சாரப் பேரவைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக பீக்கர் அலி, அட்டாக் சுல்தான், அமீனுதீன், சாகுல், உள்ளிட்ட MKP-யினர் முன்னின்று நேற்று இரவு ஜொஹர் அடக்கத்தலத்தில் அவரது உடலை சட்ட ரீதியாக அடக்கம் செய்தனர். தாயகத்தில் உள்ள அவரது உறவினர் நஸீர், இதற்காக மஜக-வுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்து கொண்டார். தகவல், #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை, #தகவல்_தொழில்நுட்ப_அணி, ஜொஹர் - மலேஷியா 21-08-2020