காரைக்குடி:ஆக.23.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மஜகவில் இணைந்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ், அவர்கள் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், எடுத்துரைக்கப்பட்டு ராஜா முகம்மது, அவர்கள் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயினுலாபுதீன், மற்றும் இளையான் குடி நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காரைக்குடி_நகரம்
#சிவகங்கை_மாவட்டம்
22.8.2020