கன்னியாகுமரி-ஆகஸ்ட்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சியில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன் தலைமையில் மாவட்டச் செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ் மற்றும் நாகர்கோவில் மாநகரச் செயலாளர் அமீர்கான் ஆகியோர் தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம். 08/08/2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
மஜக மதுரை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
மதுரை-ஆகஸ்ட்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் 07-08-2020 அன்று மாலை 6.30 மணியளவில் மாவட்டச் செயலாளர் MM.இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை பாருக் மற்றும் புதூர்கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், மாவட்டத்தில் அடுத்தகட்டமாக எடுக்கவேண்டிய கொரோனா தடுப்பு நடவடிகைகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டப்பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை செயளாலர்கள் மேலூர் முபாரக், கோடை அப்துல் மஜீத், பென்ஸ் மோகன், கோரிப்பாளையம் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கேபிள் பாட்ஷா, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பஷீர்கான் மற்றும் மாநகர, நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம் 07-08-2020
சிங்கப்பூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வந்த தமிழர்கள்!! மனிதநேய சேவையாற்றிய மஜக விமான நிலைய சேவைக்குழு!!
திருச்சி:ஆக.08., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சேவை செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் ஆயப்பாடி பகுதியைச் சார்ந்த வயதானவர்கள் வந்தே பாரத் விமானம் மூலம் திருச்சிக்கு வருவதாகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் மஜக நிர்வாகிகள் மூலம் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு, அவர்களுக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர் பாபுபாய், அவர்களின் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் பகுருதீன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் gk காதர், மற்றும் சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த அபுதாஹிர், ஆகியோர் திருச்சி விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்று பின்பு அவர்களை சொந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த விமானத்தில் வந்த மற்றொரு பயணிகளுக்கு வாகனம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மனிதநேய ஜனநாயக
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் மஜக சார்பில் கிளை அலுவலகம் திறப்பு!
கன்னியாகுமரி-ஆகஸ்ட்.08., கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. திருவிதாங்கோடு பேருராட்சி கிளைச் செயலாளர் நாசர் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் ருபிகர் அலி முன்னிலையில் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் அவர்கள் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன், திருவிதாங்கோடு பேரூராட்சி துணை செயலாளர் பிரின்ஸ், மாநகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 07-08-2020
நள்ளிரவில் நேர்ந்த விபத்து! துரிதமாக செயல்பட்ட கோவை மஜகவினர்!!
கோவை:ஆக.06., கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கி வருகிறது மேலும் அவ்வழியே வாகன போக்குவரத்தும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு பேருந்து நிலையத்தின் வெளியே செல்லும் பாதையில் கனரக வாகனம் சென்றதால் மேல இருந்த ராட்சத வளைவு இடிந்து விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மஜக வினர் உடனடியாக பொதுமக்களை அப்புறப்படுத்தி காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும், தகவல் அளித்து ராட்சத கிரேன் வாகனம் மூலம் அவ்வளைவை அப்புறப்படுத்தினர். மஜக வினரின் துரித முயற்சியால் யாருக்கும் பாதிப்பில்லாமல் தடுக்கப்பட்டது. இப்பணியில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைசல், 77வது வார்டு பொருளாளர் அலி, 78வது வார்டு செயலாளர் ஜாகிர், ஆகியோர் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 06.08.2020