நள்ளிரவில் நேர்ந்த விபத்து! துரிதமாக செயல்பட்ட கோவை மஜகவினர்!!


கோவை:ஆக.06.,

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கி வருகிறது மேலும் அவ்வழியே வாகன போக்குவரத்தும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நள்ளிரவு பேருந்து நிலையத்தின் வெளியே செல்லும் பாதையில் கனரக வாகனம் சென்றதால் மேல இருந்த ராட்சத வளைவு இடிந்து விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்த மஜக வினர் உடனடியாக பொதுமக்களை அப்புறப்படுத்தி காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும், தகவல் அளித்து ராட்சத கிரேன் வாகனம் மூலம் அவ்வளைவை அப்புறப்படுத்தினர்.

மஜக வினரின் துரித முயற்சியால் யாருக்கும் பாதிப்பில்லாமல் தடுக்கப்பட்டது.

இப்பணியில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைசல், 77வது வார்டு பொருளாளர் அலி, 78வது வார்டு செயலாளர் ஜாகிர், ஆகியோர் ஈடுபட்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
06.08.2020