திருச்சி:ஆக.08.,
வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சேவை செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் ஆயப்பாடி பகுதியைச் சார்ந்த வயதானவர்கள் வந்தே பாரத் விமானம் மூலம் திருச்சிக்கு வருவதாகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் மஜக நிர்வாகிகள் மூலம் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு, அவர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர் பாபுபாய், அவர்களின் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் பகுருதீன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் gk காதர், மற்றும் சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த அபுதாஹிர், ஆகியோர் திருச்சி விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்று பின்பு அவர்களை சொந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த விமானத்தில் வந்த மற்றொரு பயணிகளுக்கு வாகனம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மனிதநேய சேவையை பயணிகளின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
07/08/2020