கொரோனா தொற்று காரணமாக இக்கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதனால் பள்ளிக்கூட வகுப்புகள் தற்போது இணையம் வழியாக (Online) நடைப்பெற்று வருகின்றது. இந்த வழிமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை எளிய குடும்பத்து பிள்ளைகள் பெற முடியாத சூழல் பரவலாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, 6 மாதங்களுக்கு இலவச இணைய வசதியுடன் கூடிய திறன் பேசிகளை (Smartphone) விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தற்போது பஞ்சாப் மாநில அரசு மாணவர்களுக்கு, இவ்வகை திறன்பேசி (Smartphone) எனப்படும் அலைபேசிகளை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதை முன்மாதிரியாக கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 13-08-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
திருவாரூர் மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!
திருவாரூர்-ஆகஸ்ட்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் மாவட்டச் செயலாளர் சீனி ஜெஹ்பர் சாதிக் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம். 12/08/2020
அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!
வேலூர்.ஆகஸ்டு.12., நாகையை சேர்ந்த பெண்மணி ஒருவர் உடல் நலக்குறைவால் வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் 3-யூனிட் இரத்த தானம் செய்தனர். அச்சமயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்மணிக்கு அவசர அறுவை சிகிச்சைக்கும் இரத்தம் தேவைபடுவதாக மருத்துமனை சார்பில் கேட்டு கொண்டதற்கு இணங்க மேலும் 1-யூனிட் இரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 12.08.2020
குமரி மாவட்டம் கற்காடு பகுதியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஆகஸ்ட் 12, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி கற்காடு பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐய்யப்பன், அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி பருகி பயனடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டச் துணை செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர துணை செயலாளர் அஷ்ரப், சுசீந்திரம் பேரூராட்சி கிளை செயலாளர் வினோத், சுசீந்திரம் பேரூராட்சி கிளை பொருளாளர் ஐய்யப்பன் மற்றும் உறுப்பினர்கள் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 12-08-2020
கொரோனாவால் உயிரிழந்த கிறித்தவர்_உடல்! நல்லடக்கம் செய்த மஜகவினர்!
சென்னை.ஆகஸ்ட்.11., கொரோனா தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றை தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இறந்தவரின் உறவினர்கள் மற்றும் மே-17 இயக்க தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடலை மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியினர் பெற்று, பாதுகாப்பு உடையுடன் சென்னை சாந்தோம் கிறித்தவ இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனா். இது குறித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் மாநில துணைத் தலைவர் ஸ்டீபன் அவர்கள் நன்றி கூறி பேசினார். அப்போது இது ஈடு இணையற்ற சேவை என்றும், சாதி மதம் பாராமல் இக்கட்டான நேரத்தில் மஜக-வினர் ஆற்றும் பணியை மனம் நெகிழ பாராட்டுவதாகவும் கூறினார். சென்னையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு, அழைப்பு வரும் இடங்களுக்கு மஜக மருத்துவ சேவை அணியின் மாநில துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மஜக-வினர் சென்று இப்பணிகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மருத்துவ_சேவை_அணி 11-08-2020