வேலூர்.ஆகஸ்டு.15., நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கேரளா மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு (6 யூனிட்) கேரளா மாநிலம் கேலிகட் மாவட்ட சேர்ந்த 20 வயது இளைஞருக்கு (7 யூனிட்) Bone marrow transplantation எலும்பு மஜ்ஜை மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற மஜகவினர் 13-யூனிட் இரத்த தானம் செய்தனர். அச்சமயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்மணிக்கு அவசர அறுவை சிகிச்சைக்கும் இரத்தம் தேவைபடுவதாக அவரின் கணவர் சார்பில் கேட்டு கொண்டதற்கு இணங்க மஜகவினர் மேலும் 2-யூனிட் இரத்த தானம் செய்தனர். இரத்ததானம் பெற்றவர்களின் உறவினர்கள் மஜகவினருக்கு நன்றி கூறியதுடன், இது ஈடு இணையற்ற சேவை என்றும், சாதி மதம் பாராமல் இக்கட்டான நேரத்தில் மஜக-வினர் ஆற்றும் பணியை பாராட்டுவதாக கூறினர். மேலும் தேவையை உணர்ந்து மருத்துவமனைக்கு உடனடியாக இத்தனை நபர்கள் வருகை தந்து இரத்ததானம்
இஸ்லாமிய கலாச்சார பேரவை
74வது சுதந்திர தினம்! மஜக சார்பாக தோப்புத்துறையில் தேசியகொடியேற்றி கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.!
ஆகஸ்ட்-15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம், தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மருதநாயக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி வேதை நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுபகரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சேக் அஹமத்துல்லாஹ் தலைமை வகித்து, வரவேற்புரையாற்றிட தீன்ஸ் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இறுதியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் நிர்வாகி சதாம் நன்றி கூறிட கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், நகர துணைச் செயலாளர் முருகானந்தம், ஷேக் அமானுல்லாஹ் உட்பட திரளான மஜகவினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_தெற்கு_மாவட்டம். 15-08-2020
74வது சுதந்திர தினம்.! மஜக மாநிலப்பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது தேசிய கொடியேற்றினார்.!
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஜக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர போராட்டங்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் முகம்மது சைஃபுல்லாஹ், வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்டச் செயலாளர் காஜாமைதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திர தினம்! நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.!
நாகை.ஆகஸ்ட்-15., 74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளரும், MLA அவர்களின் தனிச் செயலாளருமான நாகை முபாரக் அவர்கள் தேசியை கொடியை ஏற்றி வைத்தார். பிறகு, சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் 500 பேருக்கு இலவசமாக முககவசம் வழங்ப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் சதக்கத்துல்லா, அலுவலக செயலாளர் சம்பத்குமார், தமீஜுதீன், முரளி, நகர செயலாளர் அஜிஸ் ரஹ்மான், நாகை ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன், துணை செயலாளர் சதாம் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல், #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 15-08-2020
ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி!
நம் இந்திய திருநாடு 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஐரோப்பியர்களிடமிருந்து விடுதலை பெற ஆயுதப் புரட்சிகளும், மக்கள் கிளர்ச்சிகளும், அஹிம்சை வழி போராட்டங்களும் நமது மண்ணில் நடைப்பெற்றன . உயிரிழப்புகள், துரோகங்கள், படு காயங்கள், சிறைவாசங்கள், நாடு கடத்தல் என நமது முன்னோர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், தியாகங்களையும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறோம். இன்று சமகாலத்தில் நம் நாடு சந்தித்து வரும் சிக்கல்களையும், சவால்களையும் அதோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம், சாதி, இனம், நிலவியல், பருவ காலம் ஆகியவற்றில் வெவ்வேறு தன்மைகளை கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையோடு நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். அதுவே இந்தியாவின் சிறப்பாக இருக்கிறது. இவற்றுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதை நினைத்துப் பார்க்கின்ற போது, நமது முன்னோர்கள் இதற்காகவா சுதந்திரப் போராட்டங்களை நடத்தினார்கள்? அவர்களது கனவுகள் எல்லாம் சிதைவது நியாயம் தானா? என்ற கேள்விகள் நம் மனங்களை அதிர செய்கிறது. நாட்டின் நரம்பு மண்டலங்களாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை வேட்டையாட துணை போவது, அனைவரும் உயர் கல்வி பெறுவதை தடுக்க நினைப்பது, கூட்டாட்சி தத்துவத்தை