74வது சுதந்திர தினம்! நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.!


நாகை.ஆகஸ்ட்-15.,

74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஜக மாநில துணைச் செயலாளரும், MLA அவர்களின் தனிச் செயலாளருமான நாகை முபாரக் அவர்கள் தேசியை கொடியை ஏற்றி வைத்தார்.

பிறகு, சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் 500 பேருக்கு இலவசமாக முககவசம் வழங்ப்பட்டது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் சதக்கத்துல்லா, அலுவலக செயலாளர் சம்பத்குமார், தமீஜுதீன், முரளி, நகர செயலாளர் அஜிஸ் ரஹ்மான், நாகை ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன், துணை செயலாளர் சதாம் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
15-08-2020