(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிடும் வாழ்த்து செய்தி ) பழம்பெரும் அரசியல் பேரியக்கமான #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் தலைவராக அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழர் மேம்பாடு, மாநில உரிமைகள் உள்ளிட்ட அரசியல் கொள்கைகள் தூக்கி பிடிக்கும் திமுகவின் தலைவராக அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது அவரது உழைப்புக்கும், உணர்வுக்கும் கிடைத்த பரிசாகும். தமிழகத்தின் நலன்களையும், இந்திய ஒன்றியத்தின் வளங்களையும் பாதுகாக்கும் அரசியல் கடமையை அவர் தலைமையில், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் , பேரா.அன்பழகன் ஐயாவின் துணையோடு #திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. மேலும், திமுக வின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அண்ணன் துரைமுருகனுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களை ஒரு மனதாக தேர்வு செய்த திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 28.08.2018
அறிக்கைகள்
குல்தீப் நய்யார் மறைவு! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் செய்தி) விடுதலை போராட்ட வீரர், சமய நல்லிணக்கவாதி, பத்திரிக்கையாளர் என்று வலம் வந்த குல்தீப் நய்யார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. தேசப்ப்பிரிவினையின் போது காந்தியடிகளின் வழிநின்று வரலாற்று காயங்களுக்கு மயிலிறகால் மருந்து தடவிய மாமனிதர் அவர்! நெருக்கடி நிலையை நாடு சந்தித்த போது , ஜனநாயகம் காக்க , மற்றொரு சுதந்திரப் போரை நடத்தியவரில் அவரும் ஒருவர். எந்த நிலையிலும் மதச்சார்பின்மை, சமூகநீதி, போன்ற தத்துவங்கள் பலமிழக்க கூடாது என்று கருதியவர். மாநிலங்களவை உறுப்பினராக அவர் பணியாற்றியப்போது அவர் முன் வைத்த கருத்துகள் ஜனநாயக்கத்திற்கு அழகு சேர்ப்பவையாகும். அவரது கட்டுரைகள் யாவும் "அரசியல் அறிவியலில் " இடம் பெறத் தகுதியானவை. இன்று இந்தியா, வகுப்பு வாதிகளின் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள காலக்கட்டத்தில், அவரின் இழப்பு இந்திய ஜனநாயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் மஜக பங்கேற்கிறது . அத்துடன் , அவரை சார்ந்தவர்களுக்கும், அவரது ஆதரவு கொள்கை வாதிகளுக்கும் எமது ஆழமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர் #மனிதநேய ஜனநாயக கட்சி 25.08.2018
மஜகவின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்துச் செய்தி) தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஈதுல் அல்ஹா எனும் பெயரில் உலகமெங்கும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். உலக மக்கள் போற்றும் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தான் கண்ட கனவின்படி, தனது அருமை மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை நரபலி கொடுக்க முயன்றார். அப்போது இறைவனிடமிருந்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கட்டளை பிறந்தது. அதற்கு பகரமாக ஆடு ஒன்றை பலியிடுமாறு ஆணைவந்ததும் அவ்வாறே செய்தார்கள். நரபலி தடுத்து மனிதநேயம் காத்திட்ட இந்த மாபெரும் நிகழ்வே தியாக திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆடு, மாடு, ஒட்டகங்களை இறைவனுக்காக பலியிடும் நிகழ்வு ஒவ்வொரு பக்ரீத் பண்டிகையிலும் வருடம் தோறும் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையும் பாதுகாக்கப்படுகிறது என்பது ஒரு அறிவியல் செய்தியாகும். புனித ஜம், ஜம் தண்ணீரின் வரலாறும் இங்கிருந்தே தொடங்குகிறது. தியாகங்களே வரலாறுகளாகின்றன. பிறருக்காக நாம் நம்மை அர்ப்பணிக்கின்ற போதும், சேவையாற்றுகின்ற போதும் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இந்நன்னாளில் கேரளாவில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்கள் மீட்சி பெறவும்,
மஜகவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) நம் இந்திய திருநாடு 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வது நம்மையெல்லாம் உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. எத்தனையோ தடைகளையும், சோதனையான பல நிகழ்வுகளையும் கடந்து நம் நாடு முன்னேறி வருகிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமை, நமது எதிர்காலத்தை ஒளிமயமானதாக வைத்திருக்கிறது. இத்தருணத்தில் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிர் ஈந்த அனைத்து தியாகிகளையும் நெஞ்சில் சுமந்து , நாட்டின் ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் வளர்த்தெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி
சோம்நாத் சாட்டர்ஜி மறைவு..! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை.) நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் #சோம்நாத்_சாட்டர்ஜி காலமானர் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்த வீரர். கட்சி அரசியல் பேதங்களால் நாடாளுமன்ற மரபுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என கவனமாக செயல்பட்டார். இந்திய இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களுள் அவர் ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொழிலாளர்கள், எளிய மக்கள் ஆகியோரின் நலனுக்காக பாடுபட்ட ஒரு அறிவுஜீவி தலைவரை நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் தோழர்களுக்கும், உறவுகளுக்கும் மஜகவின் சார்பில் எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 13.08.18