தேனி. பிப்.28., தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய வளாகம் மற்றும் அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். காவல் நிலைய அதிகாரிகளும், காவலர்களும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தேனி மாவட்டம். 28.02.2017
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
“தேசத்தை பாதுகாப்போம்” மக்கள் திரள் பொதுக்கூட்டம்…நேரலை ஒளிபரப்பு
திட்டச்சேரியில் மஜக 2ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!
நாகை.பிப்.28., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்ற நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்ப்பு முகாமும் 28-02-2017 இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. மஜகவின் கொடியை பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி.MLA., அவர்கள் ஏற்றி வைத்து , உறுப்பினர் சேர்க்கை முகாமையும் துவங்கி வைத்தார். இதில் மாநில துணை செயலாளர் எச்.ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீது ஜெகபர், முன்சி.யூசுப், திட்டச்சேரி பேரூர் செயலாளர் செய்யது அஹமது ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து வாஞ்சூர்-நாகூர் ரவுண்டானாவிலும் கட்சி கொடியினை பொதுச்செயலாளர் ஏற்றிவைத்தார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK_IT_WING) நாகை தெற்கு மாவட்டம் 28.02.2017
மஜக தேனி (மேற்கு) மாவட்டம் 2ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு…
தேனி. பிப்.28., தேனி மாவட்டம் கம்பம் நகர அலுவலகம் முன் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தேனி மாவட்டம் 28.02.2017
மஜக 2ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அந்தியூர் நகர GHல் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது…
ஈரோடு. பிப்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் 2ஆம்ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்ள 70வதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிரட், ஆரஞ்ச், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அந்தியூர் நகர செயலாளர் ஷபி தலைமை தாங்கினார், நகர துணை செயலாளர்கள் B.M.அனீபா, S.இப்ராஹிம், நகர இளைஞரணி செயலாளர் இப்ராஹிம், பீடிநகர் செயலாளர் ரபியுல்லா, நிர்வாகிகள் ஹபிபுல்லா, ஷேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் A.K.ஷானவாஸ், மாவட்ட துணை செயலாளர் கவுந்தி சாகுல் அமீத், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் நஜீர் பேக் ஆகியோர் நோயாளிளுக்கு பிரட் வழங்கினார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) ஈரோடு மாவட்டம். 28.02.17