திட்டச்சேரியில் மஜக 2ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!

image

image

நாகை.பிப்.28., நாகப்பட்டினம்  தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்ற நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்ப்பு முகாமும் 28-02-2017 இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையில் நடைபெற்றது.

மஜகவின் கொடியை பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி.MLA., அவர்கள் ஏற்றி வைத்து , உறுப்பினர் சேர்க்கை முகாமையும் துவங்கி வைத்தார்.

இதில் மாநில துணை செயலாளர் எச்.ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீது ஜெகபர், முன்சி.யூசுப், திட்டச்சேரி பேரூர் செயலாளர் செய்யது அஹமது ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து வாஞ்சூர்-நாகூர் ரவுண்டானாவிலும் கட்சி கொடியினை பொதுச்செயலாளர் ஏற்றிவைத்தார்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK_IT_WING)
நாகை தெற்கு மாவட்டம்
28.02.2017