செய்திகள்
திருச்சியில் ஆர்ப்பாட்டம்! கிரிஸ்தவ பறையர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வேண்டும்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
பிப்ரவரி.17., வெள்ளாமை இயக்கம் சார்பில் திருச்சியில் கிரிஸ்த்தவ பறையர் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்டும், அரசியலில் உரிய அங்கீகாரம் கேட்டும் மக்களை அணி திரட்டி வருகின்றனர். 2011 - தமிழ்நாடு அரசின் மக்கள் தொகை கணக்குப் படி கிரிஸ்த்தவர்கள் மக்கள் தொகை 6.12% ஆகும். அதில் 60 சதவீதத்தினர் கிரிஸ்த்தவ பறையர் சமூக மக்கள் என கூறப்படுகிறது. அவர்கள் மக்கள் தொகை 26,28,910 என்றும் வெள்ளாமை இயக்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மக்கள் தொகையில் 3.4 % ஆகும். தாங்கள் மதத்தின் அடிப்படையிலும், சாதியின் அடிப்படையிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று வெள்ளாமை இயக்கத்தினர் திருச்சியில் முதல் களப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார். கிரிஸ்த்தவ மத தலைவர்களும், அறிஞர்களும் இவர்களின் கோரிக்கை குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிப், மஜக மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை துரை முகம்மது, வெள்ளாமை
தொடரும் இணைவுகள்! தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில்… பாளை பாரூக் தலைமையில் நெல்லை மாவட்ட செயல்பாட்டாளர்கள் மஜகவில் இணைந்தனர்
பிப்ரவரி.17., நெல்லை மாவட்டத்தில் முன்பு தமுமுக- மமக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றியவர்கள், இப்போதும் பணியாற்றுபவர்கள் என முன்னணி அரசியல் செயல்பாட்டாளர்கள் இன்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். திருச்சியில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தமுமுக, மமக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் முன்னணி செயல்பாட்டாளர் பாளை. பாரூக் தலைமையில் இன்று மஜக-வில் இணைந்தனர். விரைவில் நெல்லையில் பிரம்மாண்ட இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அதில் பல திருப்பங்கள் நிகழும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக, மமக உள்ளிட்ட அமைப்புகள் - கட்சிகளை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் அலிப் A பிலால், M.இளநீர் அப்துல், M.பால் சேக், M.முகமது இஸ்மாயில், சேக் மைதீன் உள்ளிட்டோர் இணைந்தனர். இவர்களை வரவேற்று கலந்துரையாடிய தலைவர் அவர்கள், நேற்றுவரை எப்படி செயல்பட்டார்கள்? என்பதை விட, மஜக என்னும் களத்தில் - புதிய பாதையில் ; உங்களின் புதிய பயணம் என்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். கடந்த ஒரு வருடத்தில் கிருஷ்ணகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையில் திரளானோர் இணையும் நிகழ்வு நடைபெற
நேரில் ஆறுதல்! முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…
பிப்ரவரி.16., முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி அவர்கள் விபத்தில் மரணமடைந்ததையொட்டி, அவருக்கு ஆறுதல் கூற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று நேரில் சென்றார். பிறருக்கு சேவை செய்யும் நோக்கை தன் மகன் தன்னிடம் விட்டுச் சென்றிருப்பதாக சைதை துரைசாமி அவர்கள் அந்த துயரமான நிலையிலும் கூறினார் அவரது இரங்கல் நிகழ்வில், தன் அறக்கட்டளையில் படித்த IAS, IPS, IFS, அதிகாரிகள் நாடு முழுவதிலிருந்தும் ஆறுதல் கூற வந்திருந்ததை பார்த்து, ஒரு மகன் போனாலும் இத்தனை மகன்களும், மகள்களும் இங்கு தனக்கு ஆறுதல் கூற வந்திருப்பதாக கூறிய செய்தி தன்னை நெகிழ செய்ததாக, தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் அவரிடம் கூறி, ஆறுதலை பகிர்ந்து கொண்டார். இச்சந்திப்பின் போது, மாநில செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராகிம், இளைஞர் அணி மாநில பொருளாளர் கோவை ஃபைசல், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மீன் அப்பாஸ் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 16.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..
மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, ஹாஜி SA. முஹம்மது தையூப், மதினா தெரு, லால்பேட்டை அலைபேசி; 9944008848 மாவட்ட பொருளாளராக, சிதம்பரம் A. முகமது இக்பால் நடராஜா கார்டன், சிதம்பரம் அலைபேசி; 99408 00162 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 16.02.2024.