பிப்ரவரி.19., மஜக-வின் அமைதி வழி அணுகுமுறைகளின் மீது ஏற்பட்டு வரும் நம்பிக்கைகளும், கள யதார்த்தங்களுடன் கூடிய நிதானமான அணுகுமுறைகளும் பல்வேறு தரப்பினரை ஈர்த்து வருகிறது. இதனால் தமிழகமெங்கும் மஜக பலப்பட்டு வருவதும், அதன் காரணமாக புதியவர்களின் இணைவுகள் நடப்பதும் சமீப நாட்களாக தொடர்கிறது. இன்று நெல்லையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த தீவிர களப்பணியாளர்கள் வீரவநல்லூர் இளநீர் அப்துல் மற்றும் மேலப்பாளையம் 50 வார்டுக்குட்பட்ட ஹாமிம்புரம் உமர் பள்ளிவாசல் செயலாளர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் அதில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பாளை பாரூக், மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, பொருளாளர், அலி மற்றும் அலிஃப் A. பிலால் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நெல்லை_மாவட்டம் 19.02.2024.
செய்திகள்
மஜகவில் இணைந்த புதியவர்கள்… சென்னையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்
பிப்ரவரி.19., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக மஜக-வில் இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள் என பலதரப்பட்ட மக்களும் இனைந்து வருகின்றனர். இன்று தென் சென்னை கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் மஜக மாவட்ட துணைச்செயலாளர் ஆலந்தூர் கபீர் தலைமையில், மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டார்கள். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கையை மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் ஆகியோர் எடுத்துரைத்தனர். தலைமையகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் S.M.நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னை_கிழக்கு_மாவட்டம் 18.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளராக, காதர் பாஷா த/பெ; அபிப் ரஹ்மான் 23/35, வள்ளியம்மாள் நகர், 2 வீதி, ராக்கியாபாளையம், பிரிவு காங்கேயம் ரோடு, திருப்பூர் அலைபேசி; 6383292679 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 19.02.2024.
வஃக்பு வாரியத்தை கண்டித்து போராட்டம்… மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் கண்டன உரையாற்றினார்…
பிப்.18., தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய தவறிய வஃக்பு வாரியத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், துணைச் செயலாளர் பைசல் அஹமது, பட்டுக்கோட்டை நகர செயலாளர் ராஜா முகமது உள்ளிட்ட திரளான மஜக-வினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 17.02.2024.
உத்திரகாண்ட் பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு
பிப்.18., உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹலண்ட்பூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்-மதரஸா கட்டிடம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சென்னை புளியந்தோப்பு கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பாளர் சித்திக் தலைமையில் புளியந்தோப்பில் நடைப்பெற்றது. இதில் மஜக மாநில செயலாளர் நாகை முபாரக் தலைமையில் மஜக-வினர் கலந்துக்கொண்டனர். மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன் உத்திரகாண்ட் அரசை கண்டித்தும், வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்தினை மீறும் பா.ஜ.க அரசினை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹுர், மாவட்ட துணைச்செயலாளர் M.A.அன்வர் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 17.02.2024.