மார்ச்.22., இன்று மாலை சென்னையில் தலைமை காஜி சலாவுதீன் அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (MJK)அவைத்தலைவர் மௌலான.சம்சுதின் நாசர் உமரி அவர்கள் நேரில் சந்தித்து மார்ச் 26, அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார். ஏற்கனவே மஜக வை நன்கு அறிந்திருந்த காஜி அவர்கள்,பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை பற்றி நலம் விசாரித்தார்.பிறகு மாநாட்டு பணிகள் குறித்தும்,கட்சி குறித்தும் நல்ல முறையில் கலந்துரையாடி,தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இச்சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் மூஸா ஹாஜியார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். -தகவல் மஜக ஊடகப்பிரிவு
செய்திகள்
குவைத்தில் நடந்த ம.ஜ.க.வின் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு…
மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது. குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் முத்துக்காப்பட்டி ஹாஜா தலைமையில் நடைபெற்றது. ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஒரு வரலாறு உருவாகிறது.! மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்
#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது . அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை . #சொந்தங்களே…! கடந்த அக்டோபர் 6 - 2015 தொடங்கி நாம் நடத்தி வந்த உட்கட்சி ஜனநாயகத்திற்கான போராட்டம் கடந்த பிப்ரவரி 25 – 2016 அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது . எத்தனையோ உண்மைகளும் , நியாயங்களும் புதைக்கப்படலாம் . ஆனால் நியாய தீர்ப்பு நாளில் இறைவனுக்கு முன்னால் அவற்றை நாம் முன்னிறுத்துவோம் . இந்த 4½ மாதங்களில் வன்முறைகள் , அவதூறுகள் , அராஜகங்கள் ஆகியவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டோம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் அவர்களுக்கு குவைத்தில் உற்ச்சாக வரவேற்பு…
மார்ச்.18.,மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச்18-3-2016 நடைபெறவிருக்கும் #வஞ்சிக்கப்பட்டோரின்_வாழ்வுரிமை_மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும் பொது செயலாளர் அண்ணன் #தமிமுன்_அன்சாரி அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள். விமானநிலையத்தில் மண்டலம் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். அல்ஹம்துல்லில்லாஹ் அழைப்பில் மகிழும் மனிதநேய கலாச்சார பேரவை மனித நேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம் 55278478,55260018,60338005
மஜக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்
மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, மாநில செயலாளர்கள் சாதிக் பாஷா, தைமிய்யா மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லாவரம் ஷாஃபி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு (சென்னை)