மார்ச்.30., வேலூர் : வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
செய்திகள்
வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!
மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் என்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. மாநாட்டிற்கு மக்களை தங்கள் சொந்த செலவில் அழைத்து வந்த பலருள் தம்பி வெங்கடேஷும் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் அழைத்து வந்திருந்தார். அது போல் சென்னையில் I.T. துறையில் வேலை செய்யும் தம்பிகள் மணி மாறன், நேசக்குமார் போன்றவர்களும் வாகனங்களில் மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி வந்திருந்தனர். அதேப்போல லயோலா கல்லாரி மாணவர் செபாஸ்டின் தனது கல்லூரி நண்பர்களை வேனில் அழைத்து வந்திருந்தார். இவர்களை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் மஜக அரசியல் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது . மற்ற தலைமைகளை புறக்கணித்துவிட்டு இவர்கள் மஜக-வின் தலைமையை அங்கீகரித்திருப்பது தமிழக பொதுவாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனையாகும். நம்மை நம்பி பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும் , மாணவர்களும் வருகிறார்களே என நினைக்கும்போது எமக்கு மிகுந்த பொறுப்புணர்வு ஏற்படுகிறது. சமூக நீதி,
திமுக பிரமுகர் மஜகவில் இணைந்தார்…
மார்ச்.29.,திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் 'ஊராட்சி மன்ற தலைவரும்' திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தார். இந்நிகழ்வின் போது துணைப்பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மற்றும் மாநில துணைச்செயலாளர் கோவை பஷீர் அஹமது ஆகியோர் உடன் இருந்தனர். மஜக ஊடகப்பிரிவு
மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது…
பத்திரிக்கை அறிக்கை மனிதநேய ஜனநாயக கட்சி அரசியல் மறுமலர்ச்சி மாநாடு YMCA திடல், OMR சாலை - சென்னை மார்ச் 26, 2016, சனிக்கிழமை * கலீபா உமர் (ரலி) மைதானம், * காயிதேமில்லத் மேடை * ஐயா பெரியார், போராளி ரோஹித் வெமுலா நுழைவாயில்கள் * மவ்லவி. அப்துல் ரஹீம் வரவேற்பு வளைவு மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது. இதில் பொருளாளர், S.S.ஹாரூன் ரசீது,அவைத் தலைவர் மவ்லவி S.S. நாசிர் உமரீ, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. முகம்மது நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் K.M. முகம்மது மைதீன் உலவி, செய்யது முகம்மது பாரூக், மதுக்கூர். ராவுத்தர்ஷா , கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை .செல்லச்சாமி , மாநிலச் செயலாளர்கள் A. சாதிக் பாட்ஷா, N.A.தைமிய்யா, கோவை . அமீர் சுல்தான் ,H. ராசுதீன், நாச்சிக்குளம் . தாஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் P. அனிஸ், A.அப்துல் பஷீர், புதுச்சேரி அப்துல் சமது, இளைஞரணி செயலாளர் J.ஷமீம் அஹமது, மனிதநேய