வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!

மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர்.

நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் என்பது பெருமகிழ்ச்சியை தருகிறது.

மாநாட்டிற்கு மக்களை தங்கள் சொந்த செலவில் அழைத்து வந்த பலருள் தம்பி வெங்கடேஷும் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் அழைத்து வந்திருந்தார்.

அது போல் சென்னையில் I.T. துறையில் வேலை செய்யும் தம்பிகள் மணி மாறன், நேசக்குமார் போன்றவர்களும் வாகனங்களில் மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி வந்திருந்தனர்.

அதேப்போல லயோலா கல்லாரி மாணவர் செபாஸ்டின் தனது கல்லூரி நண்பர்களை வேனில் அழைத்து வந்திருந்தார்.

இவர்களை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் மஜக அரசியல் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது . மற்ற தலைமைகளை புறக்கணித்துவிட்டு இவர்கள் மஜக-வின் தலைமையை அங்கீகரித்திருப்பது தமிழக பொதுவாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனையாகும்.

நம்மை நம்பி பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும் , மாணவர்களும் வருகிறார்களே என நினைக்கும்போது எமக்கு மிகுந்த பொறுப்புணர்வு ஏற்படுகிறது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம் , நேர்மையான அரசியல் மனிதநேய சேவைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய களங்களில் இவர்களை பயிற்றிட திட்டமிட வேண்டியுள்ளது.

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை இவர்களுக்கு வகுப்பெடுத்து தெளிவும் உறுதியும் மிக்க தலைவர்களாக மாற்றும் கடமை நம் முன்னால் இருக்கிறது என்பதை உணர்கிறோம்.

ஆம்! எமது தலைமையை ஏற்று வரும் அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தினர் மகிழும் வகையில் திசைக் காட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இறையருளால் , வெறிப்பிடித்த தலைவர்களிடமிருந்து இவர்களை காப்பாற்றி நெறிப்பிடித்த தலைவர்களாக மாற்றுவோம்!

இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30-03-2016