ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்களின் தலைமையில்.. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.பாரதிமோகன் MP அவர்களையும்.. குடந்தை சட்டமன்ற வேட்பாளர் திரு.இராம இராமநாதன் அவர்களையும்.. நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது இதில் மாவட்ட துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், முஹம்மது யாசின், தமீமுல் அன்சாரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.... தகவல் : மஜக ஊடகப் பிரிவு - தஞ்சை வடக்கு
செய்திகள்
மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார்…
ஏப்.09., மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார். நாகப்பட்டினம் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி வேட்பாளரும் மஜகவின் பொதுச்செயலாளருமான M.தமிமுன் அன்சாரி நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அவர்கள் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை நாகப்பட்டினத்தில் துவங்கினார். இதில் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
மஜகவின் நாகை சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு..
ஏப்.09. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரும் மஜகவின் மாநிலப் பொதுச்செயலாளருமான M.தமீமுன் அன்சாரி, அஇஅதிமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு நாகை மாவட்டம்
மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.
ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் 8:4:2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் p.m.சேக் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் p.m. சேக் அகமது அப்துல்லா, மாவட்ட பொருளாளர் புதுர் சாலி, மாவட்ட துணைச் செயலாளர் இம்தியாஸ் அகமது அகியோர் நியமிக்கப்பட்டனர். 1,மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் 1.அட்வகேட் A.ஜமாலுதீன் மாவட்ட துணைசெயலாளர். 2 , இளைஞர் அணி செயலாளர் m. கானி 3 , பகுதி செயலாளர் அபுதாகீர். 4 .மாவட்ட தொழிற்சங்க செயலாளர் A. குருநாதன் 5. இப்ராகிம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் 6 கேபிள் பாஷா மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகியோர் நியமிக்கப்பட்டனர்.
மஜக புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் புதிய கிளை துவக்கம்…
ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துரை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயளாலர்கள் முகம்மது ஜான், முகம்மது ஹாரிஸ், லெட்சுமணன் ஆகியோர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு