நேற்று (17.06.2016)9 தமிழக சட்டசபை கூடியது . கவர்னர் உரையை மட்டுமே பிரதானமாக கொண்ட இன்றைய அமர்வில் அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டது . அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி தலைவர்கள் M.தமிமுன் அன்சாரி , தனியரசு , கருணாஸ் ஆகியோருக்கு எதிர்கட்சி வரிசைகளில் முன்வரிசையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது . கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு , சபாநாயகர் அதை தமிழில் மொழிப்பெயர்த்தார் . பிறகு அவையின் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன . அவையிலிருந்து வெளியே வந்த மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறியதாவது… கடந்த 5 ஆண்டுகளில் முதல் அமைச்சர் மாண்புமிகு. அம்மா அவர்கள் முன்னெடுத்த நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கவர்னர் உரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது . தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமூக – பொருளாதார களங்களில் பயனடையக்கூடிய வகையில் சமூக – பொருளாதார வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது . சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பிற்கும் , வளர்ச்சிக்கும் இந்த
செய்திகள்
குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் TVS டாக்டர் ஹைதர் அலி அவர்களுடன் சந்திப்பு…
TVS குழுமத்தின் தொழில் அதிபர் சகோ.டாக்டர். ஹைதர் அலி அவர்களை மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், மண்டல ஆலோசகர் சகோ. திருபுவனம் முசாவுதீன் அவர்களும், மண்டல பொருளாலர் சகோ. நீடூர் நபீஸ் அவர்களும் மண்டல செயற்குழூ உறுப்பினர் சகோ.சீனி முஹம்மது ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. *மனிதநேய கலாச்சார பேரவை* *மனிதநேய ஜனநாயக கட்சி* குவைத் மண்டலம். 55278478-55260018-60338005.
சிக்கல் ஜமாத்தார்களுடன் நாகை MLA சந்திப்பு ..!
ஜூன்.15., நேற்று (14-06-2016) நோன்பு துறப்புக்காக நாகை ஒன்றியம் சிக்கல் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி (பொதுசெயலாளர் மஜக ) சென்றார் . நோன்பை நிறைவு செய்துவிட்டு , மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் சந்திப்பு நடைபெற்றது . அதில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார். - மஜக ஊடகப் பிரிவு
நாகூர் கடற்கரையில் MLA ஆய்வு
நாகூர் கடற்கரையை மேம்படுத்தும் பணியின் தொடக்கமாக சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் நாகூர் கடற்கரையை பார்வையிட்டார்.அவருடன் நாகை நகர்மன்ற தலைவர் #மஞ்சுளா_சந்திரமோகன் அவர்களும் வருகை புரிந்தார். கடற்கரை பூங்காவில் படர்ந்திருக்கும் கருவேமரங்களையும்,குப்பைகளையும் அகற்றுவதற்கும்,மின்விளக்குகளை சீர் செய்வதற்கும் அதிகாரிகளிடம் உத்தரவு பிறப்பித்தார். மேலும் நடைபயிற்ச்சி தளம்,நிழற்குடை அமருமிடங்கள்,வணிக கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றுடன் கடற்கரை விரைவில் மேம்படுத்தபடும் என்றும் மக்களிடம் தெரிவித்தார். அங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று மணலில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் ,இரவு நேர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதே நேரம் இப்பகுதியை பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் நிர்வாகமும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும் தான் மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று கூறினார். #நாகூர்_மக்களின்_நீண்டகால_கனவு_நினைவாகிறது தகவல்: மஜக_ஊடகப் பிரிவு நாகை
மணல் கொள்ளைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
நாகை MLA நேரில் களமிறங்கினார்! நாகூர் வெட்டாறு அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும்,இதனை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் நாகூர் வணிகர் சங்கமும்,ரோட்டரி கிளபும் நாகை தொகுதி MLA #தமிமுன்_அன்சாரி அவர்களிடம் நேரில் புகார் அளித்தனர். உடனடியாக மணல் கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்றார். கலெக்டரை நேரில் சந்தித்து அங்கு நடைபெற்ற மணல் கொள்ளை சம்பந்தமாக பேசியதுடன்,இனி அங்கு மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இச்சம்பவம் இப்போது தான் முடிவுக்கு வந்திருப்பதாக நாகூர் வணிகர்கள் MLA விடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.இந்த கள ஆய்வின் போது #அதிமுக_மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். பதவியேற்றப் பிறகு நாகை தொகுதி MLA தமிமுன் அன்சாரி அவர்களின் முதல் கள ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: மஜக ஊடகப் பிரிவு நாகை