நேற்று (17.06.2016)9 தமிழக சட்டசபை கூடியது . கவர்னர் உரையை மட்டுமே பிரதானமாக கொண்ட இன்றைய அமர்வில் அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டது .
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி தலைவர்கள் M.தமிமுன் அன்சாரி , தனியரசு , கருணாஸ் ஆகியோருக்கு எதிர்கட்சி வரிசைகளில் முன்வரிசையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது .
கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு , சபாநாயகர் அதை தமிழில் மொழிப்பெயர்த்தார் . பிறகு அவையின் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன .
அவையிலிருந்து வெளியே வந்த மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது அவர் கூறியதாவது…
கடந்த 5 ஆண்டுகளில் முதல் அமைச்சர் மாண்புமிகு. அம்மா அவர்கள் முன்னெடுத்த நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கவர்னர் உரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது .
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமூக – பொருளாதார களங்களில் பயனடையக்கூடிய வகையில் சமூக – பொருளாதார வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது .
சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பிற்கும் , வளர்ச்சிக்கும் இந்த அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது .
முக்கியமாக வெளிப்படையான , சிறப்பான நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் , பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பிறகு லோக் ஆயுக்தா அமைப்பு நிறுவப்படும் என கூறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .
மொத்தத்தில் கவர்னர் உரை நிறைவளிக்கிறது . அதை நாங்கள் வழிமொழிகிறோம் . பாராட்டுகிறோம் .
இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கூறினார் .
– மஜக ஊடகப்பிரிவு