மணல் கொள்ளைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

நாகை MLA நேரில் களமிறங்கினார்!

நாகூர் வெட்டாறு அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும்,இதனை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் நாகூர் வணிகர் சங்கமும்,ரோட்டரி கிளபும் நாகை தொகுதி MLA #தமிமுன்_அன்சாரி அவர்களிடம் நேரில் புகார் அளித்தனர்.

உடனடியாக மணல் கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்றார்.

கலெக்டரை நேரில் சந்தித்து அங்கு நடைபெற்ற மணல் கொள்ளை சம்பந்தமாக பேசியதுடன்,இனி அங்கு மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இச்சம்பவம் இப்போது தான் முடிவுக்கு வந்திருப்பதாக நாகூர் வணிகர்கள் MLA விடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.இந்த கள ஆய்வின் போது #அதிமுக_மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பதவியேற்றப் பிறகு நாகை தொகுதி MLA தமிமுன் அன்சாரி அவர்களின் முதல் கள ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மஜக ஊடகப் பிரிவு நாகை