You are here

அதிகாரிகளுடன் நாகை MLA சந்திப்பு

நாகப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில்,நாகை சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் இன்று துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடலை நடத்தினார்.

தொகுதி மேம்பாடு குறித்தும்,தொகுதிக்கு ஆற்ற வேண்டிய திட்டமிடல்கள் குறித்தும் கருத்துக்களை பறிமாறினார்.

நேர்மையான முறையில் தான் மக்கள் பணி ஆற்ற வந்திருப்பதை  குறிப்பிட்டு,அதற்கு அதிகாரிகள் நல் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முக்கிய அதிகாரிகளின் அலைப்பேசி எண்களை இணைத்து #வாட்ஸஅப் குழுமம் தொடங்கப்படும் என்றும்,அதன் வாயிலாக பணிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விரைவில் நாகப்பட்டினம் நகராட்சியின் சார்பில் 150 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என்றும்,அதை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை கேட்டுப் பெற விருப்பதாகவும் தெரிவித்தார்.

பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து தொகுதிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

தகவல்: மஜக ஊடகப் பிரிவு நாகை

Top